Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பலவகையான கீரைகளும் அவற்றின் அற்புத பயன்களும்....!

பலவகையான கீரைகளும் அவற்றின் அற்புத பயன்களும்....!
அகத்திக் கீரை: பித்தம் தீரும்; வெப்பத்தை குறைத்து, உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும். ஜீரண சக்தியை பெருக்கும். இதை, 15 நாட்களுக்கு ஒரு முறை பயன்படுத்தி வர, உடல் ஆரோக்கியமாகும்.
அரைக் கீரை: சளி, இருமல், தொண்டைப் புண் மற்றும் காய்ச்சல் நீக்கும். உடல் சூட்டை சமப்படுத்தும், ஆண்மை பலப்படும். மலச்சிக்கல்  நீங்கும். வாத நோய்களை கட்டுப்படுத்தும்; இதயம், மூளை வலுப்பெறும்.
 
காசினிக் கீரை: இது, நீரிழிவு, வாதம், உடல் சூடு, ரத்த சுத்தி, மூட்டு வீக்கம் போன்றவை நீங்க உதவுகிறது.
 
சிறு கீரை: சிறுநீரகத்தில் உண்டாகும் நோய்கள், பித்தம், கண் மற்றும் காச நோய்களை குணப்படுத்தும்; முகப்பொலிவு, உடல் வலு உண்டாகும்.
 
சுக்காங் கீரை: எல்லாவித பித்தங்கள், குடல் கோளாறுகள், நெஞ்செரிவு, வாய்வு, குன்ம வலி, வாந்தி இவற்றை நீக்கி. பசி உண்டாக்கும். மதுவின் பாதிப்பை போக்கும், ஈரல் வலுவடையும், ரத்தத்தை சுத்தி செய்யும்.
 
பசலைக் கீரை: கண் எரிச்சல், நீர்க்கடுப்பு, வெள்ளைப் போக்கு, வாந்தியை போக்கும். கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் மலச்சிக்கல், நீர் அடைப்புக்கு இது சிறந்த நிவாரணம் தாய்ப்பால் சுரக்கும். சீழ் பிடித்து வேதனை தரும் கட்டிகளின் மீது இதன் இலைகளை வதக்கி கட்டினால்,  கட்டி உடைந்து, சரியாகும்.
 
பருப்பு கீரை: ரத்த சுத்திக்கு சிறந்தது; எல்லா வாத, சரும நோய்கள், மேக ரோகங்கள், பித்த கோளாறுகள், கல்லீரல் நோய்கள், சிறுநீரக  கோளாறுகள், சீதபேதி இவற்றை நீக்கும்.
 
புளிச்ச கீரை: சொறி, சிரங்கு, கரப்பான் போன்ற தோல் நோய்கள் விலகும். விந்து பலப்படும், மந்தம் விலகும், காச நோய் கட்டுப்படும், தேக  பலம், அழகு கூடும்.
 
பிரண்டை இலை: சுளுக்கு குணமாகும்; நன்றாக பசி எடுக்கும். மலக்கட்டு நீங்கும், ஜுரம் குறையும்.
 
பொன்னாங்கண்ணிக் கீரை: இது, தங்க சத்துடையது. கண் மற்றும் மூலநோய், மூட்டு வலிக்கு சிறந்த நிவாரணி. ஈரல் வலுப்படும்;  நெஞ்செரிச்சல் தணியும், காமாலை நோய்க்கு சிறந்தது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நெஞ்சில் பிடித்துள்ள சளியை வெளியேற்ற உதவும் ஓமம்...!!