தேநீர் மனதிற்கும், நரம்புகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும். மருத்துவ நன்மைகள் கொண்ட உற்சாக பானம் தேநீர் மட்டுமே.
தேயிலை, உடல் நலத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் நன்மை செய்யக்கூடியதாகும். பச்சைத் தேயிலையை உட்கொண்டால் சில வகைப் புற்று நோய், அல்சிமர் நோய் மற்றும் இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவதாக உலகம் முழுவது நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. உடல் எடை குறைக்கவும் தேயிலை உதவுகிறது.
தேநீருடன் சுக்குப்பொடியை சேர்த்து அருந்தினால் உடலுக்கு நல்ல உற்சாகத்தை தரும். நரம்பு தளர்ச்சி குணமாகும். மேலும் கல்லீரல், மார்பகம், தோல் நுரையீரல் போன்றவற்றில் ஏற்படுத்தும் புற்றுநோய் செல்களை தடுக்கிறது.
தேநீர் இன்சுலின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. இதனால் இரத்தத்தில் சர்க்கரையை கட்டுபடுத்தி நீரிழிவு அபாயத்தை குறைக்கிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் தேனீர் அருந்துவது நன்மையை தரும்.
வெந்நீரில் தேயிலைப்பொடியை போட்டு அதில் எலுமிச்சை சாற்றை கலந்து சாப்பிட வயிற்றுப்போக்கு குணமாகும்.