பாகற்காய் என்றாலே கசப்பு. அதுனால் அதை அதிகம் நபர்கள் சாப்பிட விரும்புவதில்லை. நாவிற்கு கசப்பு மட்டுமே தவிர நமது ஆரோக்கியம் மிகவும் இனிப்பானது.
அறுசுவைகளில் ஒன்றான கசப்பு சுவை நமது உடலுக்கு அதிக மருத்துவ குணங்களை அள்ளித்தரும்.வாரத்தில் ஒரு முறையாவது உணவில் பாகற்காயை சேர்த்து வரவேண்டும்.
வைட்டமின் A, வைட்டமீன் B,வைட்டமின் C, பீட்டகரோடின் லுடின் போன்ற மருத்துவக்குணங்களைக் கொண்டது. இரும்புசத்து, துத்தநாகம், பொட்டாசியம், மாங்கனீசு, மெக்னீசியம் தாதுக்கள் எராளமான சத்துக்கள் கொண்டது.
பாகற்காயில் உள்ள வைட்டமின் A கண் மற்றும் சருமத்திற்கு நல்லது. கணையம் செல்களை புதுப்பிக்க பாகற்காயில் உள்ள கசப்பு மிகவும் உதவுகிறது. பாகற்காய் ஜூஸ் தினமும் குடித்தால் கல்லீரலில் உள்ள கழிவுகள் நீங்குக்கும்.
பாகற்காயில் இருக்கும் கசப்பு அமிலம் வெள்ளை அணுக்கள் உற்பத்தி அதிகரிக்கும். சர்க்கரை வியாதிக்கு பாகற்காய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இரத்தத்தை சுத்திகரிக்க பாகற்காய் உதவும். வயிற்றில் உள்ள பூச்சிக்களை தவிர்க்க பாகற்காய் உதவுகிறது.