Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரத்த அழுத்த பிரச்சனை ஏற்பட காரணங்கள் என்ன தெரியுமா...?

ரத்த அழுத்த பிரச்சனை ஏற்பட காரணங்கள் என்ன தெரியுமா...?
நமது உணவில் உப்பு மற்றும் சர்க்கரையின் அளவை குறைத்து கொள்வது நல்லது. மனதில் ஏற்படும் கவலைகள், துக்கங்கள் மற்றும் பதற்றமான மனநிலை போன்றவை நமது உடல்நலத்தில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. 

மனம் சம்பந்தமான பிரச்சனைகள் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு முக்கிய காரணிகளில் ஒன்றாக இருக்கிறது எனவே மன அழுத்தம் இல்லாதவாறு நம்மை நாம்  பாதுகாத்துகொள்ள வேண்டும்.
 
புகைக்கும் பழக்கம் கொண்ட நபர்களுக்கு ரத்த நாளங்கள் சுருங்கி போகும் நிலை உண்டாகிறது. இது எதிர்காலத்தில் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு காரணமாகிறது.
 
இரவில் நீண்ட நேரம் கண்விழிப்பவர்கள், சரியான தூக்கம் வராத நபர்கள் போன்றோருக்கு ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகிறது. எனவே ஒவ்வொரு நபரும் தினமும் சரியான அளவு ஓய்வு உடல் மற்றும் மனதிற்கு ஓய்வு கொடுக்க வேண்டியது அவசியம்.
 
ரத்த அழுத்தும் வராமல் தடுக்க விரும்புபவர்கள், அப்பிரச்சனை குறைக்க விரும்புபவர்கள் மாடு, ஆடு, கோழி போன்ற இறைச்சிகளை அறவே சாப்பிடுவதை தவிர்த்து, அசைவத்தில் மீன் மட்டும் சாப்பிடுவது மிகவும் சிறந்தது.
 
பூண்டு உடலின் ரத்த நாளங்களை விரிவடைய செய்து, ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை கரைத்து ரத்த அழுத்தம் ஏற்படாமல் காக்கிறது.
 
தினமும் காலையில் மாதுளம் பழச்சாறு அருந்துபவர்களுக்கு ரத்த அழுத்தம் பிரச்சனை குறைவதோடு, ரத்த அழுத்தம் இல்லாதவர்களுக்கு அது ஏற்படுவதற்கான சாத்தியங்களை தள்ளி போடுகிறதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடுக்கடலில் இறங்கிய விமானம்; மரணத்தில் இருந்து தப்பிய விமானிகள்