Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பூண்டை இந்த முறையில் எடுத்துக்கொள்வதால் உண்டாகும் நன்மைகள் தெரியுமா...?

Advertiesment
பூண்டை இந்த முறையில் எடுத்துக்கொள்வதால் உண்டாகும் நன்மைகள் தெரியுமா...?
பூண்டு வசம்பு, ஓமம், இவைகளை சம அளவு எடுத்து இடித்து மூன்று நாட்கள் சாப்பிட மாந்த ஜன்னி குறையும். பூண்டை நசுக்கி, சாறெடுத்து சாறை உள் நாக்கில் தடவ உள் நாக்கு வளர்ச்சி குறையும்.

குப்பைமேனி இலையுடன் பூண்டை வைத்து அரைத்துச் சாறு எடுத்து, இச்சாற்றை குழந்தைகளுக்கு கொடுக்க வயிற்றிலுள்ள பூச்சிகள் வெளியே வந்திடும்.
 
பூண்டோடு சிறிது எலுமிச்சை சாறு விட்டு அரைத்து இரு வேளை சாப்பிடக் கீல்வாதம் குணமாகும். பூண்டையும், சிறிது உப்பையும் சேர்த்துத் சாப்பிட்டால் தீடீரென ஏற்படும் வயிற்று வலி, நெஞ்சு எரிச்சல், நெஞ்சுக் கரிப்பு குறையும்.
 
வெள்ளைப் பூண்டு, வெற்றிலை இரண்டையும் அரைத்து தேமல் மீது பூசினால் மறைந்து விடும். அது போல் தொடை இடுக்கிலுள்ள கக்கூஸ் படை மீது தடவி வர அதுவும் குணமாகிவிடும்.
 
வெற்றிலைக் காம்பு, வசம்பு, திப்பிலி, பூண்டு இவைகளைச் சம அளவு எடுத்து வெந்நீரில் அரைத்து உள்ளுக்குக் கொடுக்க குழந்தைகளின் மாந்தம் குறையும், சளித் தொல்லையும் குறையும்.
 
வெள்ளைப் பூண்டு, வசம்பு, ஊமத்தை வேர் இவைகளைச் சம அளவு எடுத்து, நன்கு அரைத்து, நல்லெண்ணையில் கலந்து, காய்ச்சி நன்கு சிவந்து வரும்போது  இறக்கி விடவும். இந்த எண்ணெய்யை ஆறாத புண்கள் காயத்தின் மீது பூசினால் ஆறிவிடும்.
 
பூண்டுத் தைலத்தை உடலில் தேய்த்து வர சருமத்தில் ஏற்படும் நமச்சில், அரிப்பு மறையும். பூண்டைப் பொன்னாங்கண்ணிக் கீரையுடன் சேர்த்துச் சாப்பிட  மூலநோய் நீங்கும்.
 
ஒரு வெள்ளைப் பூண்டு, ஏழு மிளகு, ஒன்பது மிளகாய் இலை இவைகளைச் சேர்த்து அரைத்து காலை, மாலை சாப்பிட்டால் குளிர் காச்சல் போய்விடும். பூண்டுச்  சாற்றையும், இஞ்சிச் சாற்றையும் சம அளவு கலந்து காலை, மாலை மூன்று நாட்கள் சாப்பிட நெஞ்சுக் குத்து நீங்கும்.
 
பூண்டைப் பொடி செய்து தேனில் குழைத்து தலை, புருவத்தில் பூச்சிவெட்டு முடிவளராமல் இருக்குமிடத்தில் தேய்த்து வர முடி வளரும். பூண்டைப் பச்சையாகச் சாப்பிட்டால் வாத நோய் குணமாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குதிகால் வெடிப்பை போக்கும் எளிய இயற்கை மருத்துவ குறிப்புகள்!!