லிச்சி பழத்தில் பலவகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த லிச்சி பழம் பார்ப்பதற்கு பிங்க் நிறத்தில், முட்டை வடிவில் இருக்கும். இந்த லிச்சி பழம் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சுவையுடன் இருக்கும்.
 
									
										
								
																	
	லிச்சி பழத்தில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. எனவே செரிமான பிரச்சனைகள் உள்ளவர்கள் மற்றும் வயிற்று கோளாறுகள் உள்ளவர்கள்  இந்த லிச்சிப் பழம் அதிகளவு உட்கொள்ளவது மிகவும் நல்லது.
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	இதில் உள்ள வைட்டமின் சி, உடலின் இரும்புச் சத்தை உறிஞ்சும் திறனை அதிகரிக்கும். இதன் காரணமாக இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி  அதிகரித்து, இரத்த சோகை வரும் வாய்ப்பு குறையும்.
 
									
										
										
								
																	
	லிச்சி பழத்தை அதிகளவு உட்கொள்ளவதினால் உடல் எடையை வேகமாக குறைத்து விட முடியும். ஏனெனில் இந்த லிச்சி பழத்தில் இருக்கும்  நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகளவு நிறைந்துள்ளது. எனவே நம் உடலுள் சேரும் தேவையற்ற கொழுப்புகளை வெளியேற்றி உடலை  ஸ்லிம்மாக வைத்துக்கொள்ள இந்த லிச்சி பழம் பெரிதும் உதவுகிறது.
 
									
										
			        							
								
																	
	 
	லிச்சி பழத்தில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பொருள் உள்ளதால், இந்த லிச்சி பழத்தை பெண்கள் அதிகளவு உட்கொண்டால் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயில் இருந்து நல்ல பாதுகாப்பு கிடைக்கும்.
 
									
											
							                     
							
							
			        							
								
																	
	 
	லிச்சி பழத்தில் நிறைந்திருக்கும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள மிகவும் பயன்படுகிறது. எனவே லிச்சி பழத்தை அதிகளவு உட்கொண்டு வந்தால் இதயத்தை ஆரோக்கியமாக பாதுகாக்கலாம்.