பிரியாணி இலையில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. சொல்லப்போனால் பிரியாணி இலையில் ஆன்டி-பாக்டீரியல், பூஞ்சை எதிர்ப்பு மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை உள்ளதால், பல்வேறு பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.
பிரியாணி இலையில் வைட்டமின் ஏ, சி, பொட்டாசியம், சோடியம், துத்தநாகம், இரும்பு போன்ற பல சத்துக்கள் உள்ளது. பிரியாணி இலை ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக வைக்கும்.
பிரியாணி இலையில் உள்ள சத்துக்கள் மற்றும் கலவைகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படாமல் தடுக்கும். அதற்கு பிரியாணி இலையை நீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி, அந்நீரை தினமும் ஒரு டம்ளர் குடிக்க வேண்டும்.
இதய செயல்பாட்டை சீராக பராமரிக்க உதவும். நீரிழிவு நோயாளிகள் இதை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. மலச்சிக்கல் மற்றும் குடலியக்கம் போன்ற பிரச்சனைகளுக்கு டீ-யில் பிரியாணி இலையை சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் குணமாகும்.
முடி உதிர்வை தடுக்க, பிரியாணி இலை கொதிக்க வைத்த நீர் ஆறியதும் அதை முடியில் தடவி சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். சரும எரிச்சலால் அவதிபடுபவர்கள் இந்த நீரை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.
இந்த பிரியாணி இலை பாம்பு விஷத்தை முறிக்கும் தன்மை உடையது. செரிமானம் போன்ற வயிறு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த இயற்கை மருந்தாக செயல்படுகிறது.