Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆரோக்கியம் நிறைந்த தூதுவளை ரசம் செய்வது எப்படி...?

Advertiesment
ஆரோக்கியம் நிறைந்த தூதுவளை ரசம் செய்வது எப்படி...?
தேவையான பொருட்கள்:
 
தூதுவளை இலைகள் - 15
புளிக்கரைசல் - ஒரு கப்
மிளகு சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன்
வேகவைத்த பாசிப்பருப்பு தண்ணீர் - ஒரு கப்
தட்டிய பூண்டு - 5 பல்
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு 
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
 
முதலில் புளிக்கரைசலுடன் உப்பு, மஞ்சள்தூள், பூண்டு சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், தூதுவளை இலைகள் சேர்த்து வதக்கவேண்டும்.
 
பின்னர் இதனுடன் புளிக்கரைசல் ஊற்றி, ஒரு கொதிவிடவும். பிறகு, மிளகு - சீரகத்தூள், பருப்புத் தண்ணீர் சேர்த்து நுரைத்து வரும்போது இறக்கவும். மேலே  கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவேண்டும். ஆரோக்கியம் நிறைந்த தூதுவளை ரசம் தயார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நறுமணம் வீசும் திருநீற்றுப்பச்சிலை மூலிகையின் மருத்துவ குணங்கள் !!