Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு வெரிகோஸ் வெயின் நோய்க்கு தீர்வு..!!

Advertiesment
வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு வெரிகோஸ் வெயின் நோய்க்கு தீர்வு..!!
சுத்தமான மண், எறும்பு புற்றுமண் சிறிதளவு எடுத்து நீரில் குழைத்து நரம்பு முடிச்சு இருக்கும் இடத்தில் தடவி நன்றாக காய வைத்து, ஒரு மணி நேரம் கழித்து  வெதுவெதுப்பான நீரில் கழுவினால் அதிக வலி, வீக்கம் நரம்பு வலி குறைவதை உணரமுடியும்.

மஞ்சள் ஒரு டீஸ்பூன், கருந்துளசி இலை ஒரு கைப்பிடி, வசம்பு - 3 துண்டு, கற்றாழை நுங்கு - தேவைக்கேற்ப எடுத்துக் கொள்ள வேண்டும். வசம்பை அப்படியே மிக்ஸியில் போட்டு பொடித்தால் மிக்ஸி ப்ளேடு உடையக்கூடும். அதனால் வசம்பை அம்மியில் வைத்து நசுக்கி பிறகு கருந்துளசி இலைகள் ஒரு கைப்பிடி சேர்த்து  நீர்விடாமல் கற்றாழை ஜெல் சேர்த்து மிக்ஸியில் போட்டு மைய அரைக்க வேண்டும். பிறகு மஞ்சள் தூள் இந்த கலவையில் சேர்க்க வேண்டும்.
 
இதை நரம்பு சுருட்டல் இருக்கும் இடங்களில் தடவி காய வைக்க வேண்டும். தொடர்ந்து ஒரு மாதம் வரை பொறுமையாக இதை செய்து வர வேண்டும். அப்படி செய்துவந்தால் முதலில் வீக்கமும், பிறகு வலியும், படிப்படியாக குறைந்து நரம்பு சுருட்டல் விலகும்.
 
அத்திக்காயிலிருந்தும் பால் கிடைக்கும். இதை நரம்பு முடிச்சி இருக்கும் இடங்களில் தடவி பிறகு இரண்டு மணி நேரம் முதல் மூன்று மணி நேரம் வரை காயவிட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்தால் விரைவில் நரம்பு சுருட்டல் சரியாகும்.
 
மூட்டுகளுக்கும், நரம்புகளுக்கும் வலுப்படுத்தும் மூலிகை எண்ணெய்கள் பலவும் உண்டு. அதில் ஒன்றை தேர்வு செய்து இலேசாக சூடு செய்து நேரடியாக நரம்பு முடிச்சு இருக்கும் பகுதியில் தேய்க்காமல் சற்று கீழிலிருந்து தேய்த்து நரம்பு முடிச்சு இருக்கும் பகுதியில் இலேசாக அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்தால்  படிப்படியாக நரம்பு வலி நிவாரணம் பெறலாம்.
 
நரம்பு சுருட்டலை அறிந்ததும் மருந்து கடைகளில் கிடைக்கும் சுருக்க கால் உறைகளை. பொதுவாக கால் வலி இருப்பவர்கள், இதை பயன்படுத்தலாம். இந்த சாக்ஸை அணிவதன் மூலம் கால்களுக்கு அழுத்தம் கொடுத்து காலில் இருக்கும் கெட்ட ரத்தத்தை இதயத்தை நோக்கி செல்வதற்கு தூண்டுகின்றன. இதனால் நரம்பு  வீக்கம் குறையும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பூண்டை இந்த முறையில் எடுத்துக்கொள்வதால் உண்டாகும் நன்மைகள் தெரியுமா...?