Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 2 April 2025
webdunia

சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவும் கொத்தமல்லி விதை...!!

Advertiesment
கொத்தமல்லி விதை
கொத்தமல்லி விதையில் வைட்டமின் சி, பொட்டாசியம், மினரல் போன்றவை தனியாவில் மிகுதியாக அடங்கியிருக்கிறது.


இரைப்பை சார்ந்த பிரச்னைகளான அசிடிட்டி, உப்புசம், வாயுத்தொல்லை, வயிற்று வலி, வயிறு எரிச்சல் போன்ற பிரச்னைகளுக்கு சிறந்த மருந்தாக இருக்கிறது.
 
சிறுநீரகம், எலும்பு மற்றும் கல்லீரல் உள்ளிட்ட பல புற்றுநோய் உயிரணுக்களுக்கு எதிராக புதிய கொத்தமல்லி இலைச் சாறு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று  நிரூபிக்கப்பட்டுள்ளது. 
 
கொத்தமல்லி சாறு பதட்டத்தை குறைக்க உதவுகிறது, மேலும் இது குறிப்பிடத்தக்க மயக்கப் பண்புகள் மற்றும் தசை தளர்த்தும் பண்புகளையும் கொண்டுள்ளது.
 
மல்லி விதையை தேநீராக தினமும் காலையில் அருந்தி வரலாம். இதன்மூலம் வயிற்றில் உள்ள வாயுக்களை அகற்றுகிறது. வாயு மட்டுமல்லாது சளி, இருமல், மைக்ரேன் தலைவலி, ரத்தக் கொதிப்பு, சர்க்கரை, பித்தக் கிறுகிறுப்பு, சிறுநீரக பாதை நோய்கள் முதலான பல நோய்களை போக்க வல்லது.
 
கொத்தமல்லி விதை ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் என பல்வேறு ஆராய்ச்சிகள் கூறுகிறது. மேலும் அலர்ஜி சார்ந்த பிரச்னைகள், உடல்வலி, மாதவிடாய் மற்றும் ஹைப்பர் டென்ஷன் பிரச்னைகளுக்கு அருமருந்தாக இருக்கிறது. ஹார்மோன் சமநிலைக்கும் மல்லி விதை உதவி செய்கிறது.
 
தனியாவை நீரிழிவு, ரத்த அழுத்தம், புற்றுநோய் பாதிப்பு, ஆஸ்துமா, சளி தொந்தரவு போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் கட்டாயம் தனியா டீ அருந்துவது நல்லது. அதுபோல முதியவர்கள் தினமும் தனியா தேநீர் அருந்துவது அவர்களுக்கு இருக்கக்கூடிய மூட்டுவலி, உடல் சோர்வு, மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளை சரி  செய்யும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இத்தனை அற்புத மருத்துவ குணங்களை கொண்டதா முள் சீத்தாப்பழம்...?