இந்தியாவில் ராக்கெட் ஏவுதளம் அமைத்து விண்வெளி ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வெளிநாடுகள் ஆர்வம் காட்டி வருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் விண்வெளி ஆராய்ச்சி பணிகளை தனியார் நிறுவனங்களின் உதவியுடன் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவும் விண்வெளி ஆராய்ச்சிகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல பல்வேறு நாடுகள், நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட ஆர்வம் காட்டி வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள இஸ்ரோ தலைவர் சிவன் “இந்தியாவில் ராக்கெட் ஏவுதளங்கள் அமைத்து செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ அமெரிக்கா, நார்வே நாட்டு நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்தியாவின் ஏர்டெல் நிறுவனமும் விண்வெளியில் தடம் பதிக்க திட்டமிட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்