Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அல்சர் உண்டாவதற்கான காரணங்களும் அதனை தீர்க்கும் வழிமுறைகளும்...!!

Webdunia
நமது இரைப்பையில் ஹெச்.சி.எல். என்ற சுரப்பியானது, நாம் உணவு சரியான நேரத்திற்கு உட்கொள்ளாத நிலையில், அதிக அளவு சுரக்கும். இவை பசியைத் தூண்டக்கூடிய அமிலமாகும்.

வெறும் வயிற்றில், அதாவது உணவு உட்கொள்ளாமல் பசி ஏற்பட்டு இருந்தால், ஹெச்சிஎல் அமிலம் சுரந்து இரைப்பை, குடலில் அரிமானத்தை (அரிப்பை)  ஏற்படுத்தும். இவ்வாறு நாம் தினமும் உணவை சரியான நேரத்திற்கு எடுத்துக்கொள்ளவில்லை என்றால், இந்த அமிலத்தின் செயல் நாளுக்கு நாள்  அதிகரிக்கும்போது அல்சர் ஏற்படும்.
 
அல்சர் தொடர்ந்தால் குடல் அல்லது இரைப்பையில் புண் ஏற்பட்டு ரத்தம் வெளியேறும். பின்னர் கேன்சர் உண்டாகும் ஆபத்துள்ளது.
 
அல்சரின் அறிகுறிகள்: முதலில் வாயில் துர்நாற்றம் வீசும். பின்பு வாய்ப்புண் ஏற்படும். அடிக்கடி வயிறு வலி ஏற்படும். இவை அடிக்கடி தொடர்ந்தால், உணவு உட்கொள்ள முடியாமல் வாந்தி ஏற்படும்.
 
அல்சர் உண்டாவதற்கான காரணங்கள்: வெறும் வயிற்றில் அதிக ஸ்ட்ராங்கான டீ, காபி உட்கொள்ளுதல். ஆல்கஹால், காரம், புளிப்பு போன்வற்றை அதிகமாக  உணவில் சேர்த்தல். காலை உணவு என்ற ஒன்றை எடுத்துக்கொள்ளாமலே இருத்தல். 
 
புரதம் நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். பால், முட்டை, பயறுவகைகள் முதலிய உணவுகளை உணவில் அதிகம் சேர்க்கவும்.
 
நீரானது உடலுக்கு மிகவும் அவசியம். அதனால், ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை ஒரு டம்ளர் நீரை அருந்த வேண்டும். மேலும், நீராகாரம், பழச்சாறு அதிகம்  எடுத்துக்கொள்ள வேண்டும்.
 
உட்கொள்ள வேண்டியவை: பால், வெண்ணெய், நெய், பாலாடைக்கட்டி, பால் சம்பந்தப்பட்ட பொருட்கள், வேகவைத்த முட்டை, ஆவியில் வேகவைத்த மீன், அரிசி  (அவல், பொறி), வேகவைத்த சிறுதானியங்கள், பயறுவகைகள், கீரைகள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உட்கொள்ள வேண்டும்.
 
தவிர்க்க வேண்டியவை: ஆல்கஹால், வெறும் வயிற்றில் ஸ்ட்ராங் டீ, காபி ஆகியவற்றைத் தவிர்த்தல். எண்ணெய் பதார்த்தங்கள் நிறைந்த கிரேவீஸ், ஊறுகாய், மிகவும் காரமான-புளிப்புத்தன்மை வாய்ந்த உணவுகள், கேக், அதிக இனிப்புகள், வெங்காயம், முள்ளங்கி, தக்காளி ஆகியவற்றைத் தவிர்த்தல் நல்லது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போன் அதிகம் பயன்படுத்தினால் முகப்பரு வருமா? அதிர்ச்சி தகவல்..!

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

அடுத்த கட்டுரையில்
Show comments