Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குழந்தைகளுக்கு ஏற்படும் சளியின் தீவிரத்தை கட்டுப்படுத்த உதவும் கற்பூரவல்லி !!

குழந்தைகளுக்கு ஏற்படும் சளியின் தீவிரத்தை கட்டுப்படுத்த உதவும் கற்பூரவல்லி !!
, புதன், 22 ஜூன் 2022 (11:13 IST)
இலையின் சாறு முழுமையாக நீரில் இறங்கி தண்ணீர் லேசாக பச்சை நிறத்தை அடைந்து இருக்கும். அந்த நீரை மட்டும் குழந்தை பருகுவதற்குக் கொடுங்கள். 2 அல்லது 3 நாட்களுக்கு இதுபோன்ற நீரையே கொடுத்து வாருங்கள். குழந்தைக்கு சளியின் தீவிரம் கட்டுப்படும்.


கற்பூரவல்லி இலைசாற்றை சிறிதளவு தாய்ப்பாலில் கலந்து கொடுக்க குழந்தைகளுக்கு உடல் ஆரோக்கியம் கூடும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். வயிறு உப்பி, மலம் சரியாக வெளியேறாமல் இருக்கும் குழந்தைகளுக்கு இதன் இலைச்சாற்றை வெதுவெதுப்பான நீரில் கலந்து கொடுக்கலாம்.

கற்பூரவல்லி, ஏலம், கிராம்பு ஆகியவற்றை நீரிலிட்டு கொதிக்க வைத்து கஷாயமாக்கி இயற்கையான தேன் சேர்த்து பருக, உடல் பலப்படும். நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.

வீட்டு வைத்தியத்தில் ஜலதோஷம், இருமல் நீங்க, இரண்டு கற்பூரவல்லி இலைகளை கழுவி, நசுக்கி சாறு பிழிந்து 1/2 தேக்கரண்டி தேனுடன் உண்டால் நிவாரணம் கிடைக்கும். ஒரு இலையை பறித்து கழுவி உணவு உண்பதற்கு முன் கடித்து மென்று சாப்பிட்டால் உணவு ஜீரணம் நன்றாக ஆகும்.

குழந்தைகளுக்கு சளி, இருமல் இருக்கும் போது கற்பூரவல்லி இலையின் சாற்றை குழந்தைகளின் மார்பு பகுதியில் தடவலாம். நல்ல பலன் தரும்.

இலைகள் பரவலாக, அஜீரணம், ஜலதோஷம், கபம், சளி இவற்றை நீக்க குழந்தைகளுக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது. தொன்றுதொட்டு கற்பூரவல்லி இலைகள் உணவு ஜீரணக்கவும், கபம், சளி ஜூரம் குறையவும், பசி பெருகவும் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.

சிறுநீரக நோய்கள், சிறுநீரக கற்கள் ஆஸ்துமா இவற்றுக்கும் நல்ல மருந்து. சிறு பூச்சிக்கடிகள், ஒவ்வாமையால் தோலில் உண்டாகும் தடிப்புகள், எரிச்சல் இவற்றுக்கு இலைச்சாறு தடவப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பல மருத்துவ குணங்களை அள்ளித்தரும் கறிவேப்பிலை !!