Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பல மருத்துவ குணங்களை அள்ளித்தரும் கறிவேப்பிலை !!

Advertiesment
Curry leaves
, புதன், 22 ஜூன் 2022 (10:43 IST)
கறிவேப்பிலையை வறுத்து மிளகு, சீரகம், சுக்கு இவற்றைப் பொடி செய்து, உப்பு சேர்த்து சோற்றுடன் பிசைந்து சாப்பிட, பசி எடுக்காமல், வயிறு மந்தமாக இருப்பின் குணமாகும்.


நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம்.

கறிவேப்பிலை சாப்பிட்டால் கண் பார்வைக்கோளாறு நீங்கும். எலும்புகள் பலப்படும் சோகை நோய் வரப்பயப்படும்.  புண்கள் விரைவில் ஆற கருவேப்பிலை உதவுகிறது.

வாய்ப்புண் உள்ளவர்கள் கருவேப்பிலை சாப்பிட்டால் வாய்ப்புண் ஆறிவிடும்.  வயிறு சம்பந்தப்பட்ட வியாதிகளைப்போக்கும் குணம் கறிவேப்பிலைக்கு உண்டு. மலச்சிக்கலைப் போக்கும், ஜீரணசக்தியைக்கூட்டும், பேதியைக் கட்டுப்படுத்தும். பித்தத்தைக்கட்டுப்படுத்தி வாந்தி யைத்தடுத்து வயிற்றில் ஏற்படும் வயிற்று இரச்சலைத்தடுக்கும்

வெறும் வயிற்றில் தினமும் கறிவேப்பிலை இலை மென்று சாப்பிட வேண்டும். 3 மாதம் சாப்பிட நீரிழிவால் உடல் பருமனாவது தவிர்க்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறும் அளவும் குறைந்துவிடும்.

கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும்.

நரை முடி வ‌ந்தவ‌ர்களு‌ம், உண‌விலு‌ம், த‌னியாகவு‌ம் க‌றிவே‌ப்‌பிலையை அ‌திகமாக சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல் நரை முடி இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜீரணத்தை போக்கி உடலுக்கு ஆரோக்கியம் தரும் வாழைப்பழம் !!