Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிஸ்கட் அதிகம் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா.?

பிஸ்கட் அதிகம் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா.?
குழந்தைகளுக்கு பிடித்தமான ஒன்று பிஸ்கட். ஆனால் இந்த பிஸ்கட்டுக்கள் நமது உடலுக்கு என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுத்தும் என்பது தெரிந்தால், இனி சாப்பிட கொடுக்க மாட்டீர்கள். 
பிஸ்கட் தயாரிப்பின் போது அதிக வெப்ப நிலையில் எண்ணெய், டால்டா போன்றவற்றை சூடுபடுத்தும் போது உருவாகும். இந்த  டிரான்ஸ்ஃபேட் அமிலங்கள் எத்தனை சதவிகிதம் இருக்கின்றன என்பதை அதன் உறையில் பெரும்பாலும் குறிப்பிடுவதில்லை. இந்த அமிலங்கள் உடலில் அதிகம் சேர்ந்தால் கொழுப்பின் அளவு அதிகமாகி இதயநோய்கள் உருவாகும் அபாயம் உண்டு. பிஸ்கெட் கெட்டுப் போகாமல் இருப்பதற்காகவும் சுவைக்காகவும் உப்பை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
 
உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் இவற்றை சாப்பிடுவது தேவையற்ற விளைவுகளையே உண்டாக்கும். இதைவிட சுவை, நிறம், பதப்படுத்துதல் போன்ற காரணங்களுக்காகப் பயன்படுத்துகிற சில வேதிப்பொருட்கள் தடை செய்யப்பட்டவையாகவும் இருக்கலாம்.
 
பிஸ்கட் மிருதுவாக இருக்க குளூட்டன் சேர்க்கப்படுகிறது. பிஸ்கட்டின் வடிவத்துக்காகச் சர்க்கரை, சுக்ரோஸ் மற்றும் குளுக்கோஸ், ஈஸ்ட்,  சோடியம்  பைகார்பனேட், நிறமிகள் போன்றவை சேர்க்கப்படுகின்றன. பிஸ்கட் எந்த அளவுக்கு மிருதுவாக உள்ளதோ, அந்த அளவுக்கு அதிகப்  புரதச் சத்துகளைக் கொண்டது. மிருதுத்தன்மை குறைந்தால், கொழுப்புச்சத்தின் அளவு அதிகமிருக்கிறது என்று அர்த்தம்.

webdunia

 
சுக்ரோஸ் அதிகமுள்ள சர்க்கரை, பிஸ்கட்டில் அதிகம் கலக்கப்படுகிறது. இது, உடலின் சர்க்கரை அளவை அதிகரிப்பதால் சர்க்கரைநோய், இதயம் சார்ந்த பிரச்னைகள், கொழுப்புச்சத்து அதிகரிப்பது போன்றவற்றை ஏற்படுத்தும்.
 
சோடியம் பைகார்பனேட் எனப்படும் உப்பு பிஸ்கட்டில் அதிகளவு உள்ளது. உடலில் சோடியம் அதிகமானால், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகக்  கல், இதய பாதிப்புகள் போன்றவை ஏற்படும். கெட்ட கொழுப்புச்சத்து உயர்வதால், பிஸ்கட் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு உடல் எடை  அதிகரிக்கும்.
 
பிஸ்கட்டின் வேலையே பசியை அடக்குவதுதான். ஒரு குழந்தை மூன்று பிஸ்கட் சாப்பிட்டால், பசியே எடுக்காது. பெரும்பாலானவர்கள்,  குழந்தைக்குப் பாலில் நனைத்த பிஸ்கட்டைக் கொடுப்பார்கள். இது முற்றிலும் தவறான பழக்கம். க்ரீம் பிஸ்கட்டைக் கண்டிப்பாகத் தவிர்க்க  வேண்டும்.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு காலை மற்றும் மாலை நேர பிரேக்கில் சாப்பிட பிஸ்கட் கொடுத்தனுப்புகின்றோம். இதனால் மதிய உணவை முழுமையாகச் சாப்பிட முடியாமல் போகும். பிரேக்கில் பழங்களைச் சாப்பிடக் கொடுங்கள். இது பசியைத் தூண்டுவதுடன்,  கூடுதல் சத்துகளைக் கொடுக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆப்பிள் மற்றும் துவரம்பருப்பு ரசம் செய்வது எப்படி...?