Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Tuesday, 8 April 2025
webdunia

அடிக்கடி சோடா குடிப்பது ஆபத்தை ஏற்படுத்துமா...?

Advertiesment
சோடா
1. சோடாவில் சர்க்கரை அதிகமாக இருப்பதால், தொடர்ந்து சோடா குடிப்பதானால் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்.
2. சோடாவின் வண்ணத்திற்காக பல கெமிக்கல் சேர்க்கப்படுகிறது. இவை குடல், கல்லீரல் புற்றுநோய் மற்றும் தைராய்டு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக  கூறப்படுகிறது.
 
3. சோடாவிலுள்ள மூலப்பொருட்களால் நரம்பு மண்டலம் விரைவில் பலமிழந்து போய்விடும். இதனால் நரம்புத் தளர்ச்சி உருவாகும் வாய்ப்புகள் அதிகம்.
 
4. அடிக்கடி சோடா குடிப்பதால் கிட்னி சேதமடையுமாம். அது டயட் சோடாவாக இருந்தாலும் இதே பாதிப்பு ஏற்படும்.
 
5. சோடா இருக்கும் பாட்டில் மற்றும் கேன்களில் எண்டோக்ரைன் கோட்டிங் கொடுக்கப்பட்டிருக்கும். இதனால் மூச்சு பிரச்சனையிலிருந்து இதயம் தொடர்பான  பிரச்சனைகள் வருவதற்கு கூட வாய்ப்புண்டு.
 
6. சோடாவில் இருக்கும் அமிலம் பற்களில் இருக்கும் எனாமலை நீக்கிவிடும். இவற்றில் உள்ள போஸ்பொரிக் அமிலம் எலும்புகளில் இருக்கும் கால்சியம்  சத்தை தளர செய்திடும்.
 
7. சோடாவை தினமும் குடித்தால் முதுமையில் அல்சீமர் நோய்க்கு தள்ளப்படுவீர்கள் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
 
8. சோடா குடிப்பதால் ஞாபக மறதி, மந்தத் தன்மை, வாய் குழறுதல் போன்றவை உண்டாகும் வாய்ப்புகள் உண்டு.
 
9. சோடா குடிப்பதால் டைப் 2 சர்க்கரை நோய், குளுகோஸ், உயர் இரத்த அழுத்தம், கொழுப்பு மற்றும் இடுப்பு சுற்றளவு பெருக்கம் போன்ற பிரச்சினைகளும்  ஏற்படும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அந்த நேரத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்: பெண்களுக்கு மட்டுமே!