Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கல்லீரலை ஆரோக்கியமாக வைக்கும் அற்புதமான 7 உணவுகள்..!

Advertiesment
Vegetables
, செவ்வாய், 28 மார்ச் 2023 (13:32 IST)
உடலில் உள்ள பாகங்களில் உணவை செரிக்கும் கல்லீரல் மிகவும் முக்கியமானது. உடலின் பல பகுதிகளுக்கு சத்துக்களை கடத்தும் கல்லீரலை குறிப்பிட்ட உணவுகள் மூலம் ஆரோக்கியமாக வைத்திருக்கலாம்.


 
  • மிதமான அளவில் காபி உட்கொள்வதால் கொலாஜன் மற்றும் கொழுப்பை தடுத்து கல்லீரலை பாதுகாக்க முடியும்.
  • ப்ளூபெர்ரி மற்றும் ராஸ்பெர்ரி ஆகியவற்றில் உள்ள பாலிபீனால்கள் கல்லீரலை சேதமடையாமல் காக்க உதவுகிறது.
  • திராட்சை பழங்கள் சாப்பிடுவதால் கல்லீரல் வீக்கம் குறைவதுடன் ஆக்ஸிஜனேற்ற அளவு அதிகரிக்கும்.
  • நார்சசத்து, பீட்டா குளுக்கன்ஸ் அதிகமாக உள்ள ஓட்ஸ் உணவானது கல்லீரலில் சேகரமாகும் கொழுப்பின் அளவை குறைக்கும்.
  • பாதாம் பருப்பில் உள்ள விட்டமின் ஈ மற்றும் நிறைவுறா கொழுப்பு கெட்ட கொழுப்பை அகற்றவும், கல்லீரலை பாதுகாக்கவும் உதவுகிறது.
  • உணவில் தினசரி பூண்டு எடுத்துக் கொள்வது கல்லீரல் செயல்பாட்டை தூண்டுவதுடன் எடையை குறைக்கவும் உதவுகிறது.
  • முட்டையில் உள்ள அமினோ அமிலங்கள் கல்லீரல் வளர்சிதை மாற்ற விகிதத்தை மேம்படுத்த உதவுகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொடங்கிவிட்டது கோடை.. முக்கியமாக செய்ய வேண்டியவை என்ன?