Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வாழைத்தண்டை உணவில் சேர்த்துக்கொள்ளவதால் உண்டாகும் பயன்கள் !!

Advertiesment
வாழைத்தண்டை உணவில் சேர்த்துக்கொள்ளவதால் உண்டாகும் பயன்கள் !!
வாழைத்தண்டு அதிக நீர்ச்சத்து - நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. கொழுப்பைக் குறைக்கும். வயிற்றுப் புண்களைச் குணப்படுத்தும். 

சிறுநீர் எரிச்சலைப் போக்கும். ஊளைச் சதையைக் கரைத்து, உடல் பருமனைக் குறைக்கும். பெண்களின் மாவிடாய் கோளாறு- ரத்த அழுத்தத்துக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
 
சிறுநீரகத்தில் தோன்றும் கற்களைக் கரைக்கும். அதிக உடல் பருமன் கொண்டவர்கள், தொப்பை உள்ளவர்கள் அடிக்கடி வாழைத்தண்டை உணவில் சேர்த்துக் கொண்டால் நலம்.
 
வாழைத்தண்டு அதிக குளிர்ச்சி கொண்டது என்பதால் அதை உண்ணும் நாட்களில் தயிர், மோரை தவிர்க்கவும். வாழைத்தண்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிளகு, சீரகம், பூண்டு, எலுமிச்சை சாறு கலந்து உப்பு போட்டு கொதிக்க வைத்து காலை உணவுக்கு முன் குடித்து வந்தால் உடல் கனம் குறைவதோடு ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.
 
ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து உடல் பருமனால் அவதிப்படுவோர் வாழைத்தண்டு உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
 
வாழைத்தண்டு பொரியல் செய்து சாப்பிட்டால் குடலில் சிக்கியுள்ள முடி, நஞ்சு போன்றவை வெளியேறிவிடும். காலையில் வெறும் வயிற்றில் வாழைத்தண்டி ஜூஸ் குடித்து வந்தால் நெஞ்செரிச்சல் குணமாகும்.
 
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில், வைக்க தினமும் வாழைத்தண்டு ஜூஸ் குடிப்பது நல்லது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தானியங்களை வீட்டிலேயே முளைக்கச்செய்து சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் !!