Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெள்ளை சர்க்கரையை தவிர்ப்பதால் எண்ணற்ற நோய்களில் இருந்து தப்பிக்க முடியுமா...?

வெள்ளை சர்க்கரையை தவிர்ப்பதால் எண்ணற்ற நோய்களில் இருந்து தப்பிக்க முடியுமா...?
வெள்ளைச் சர்க்கரையை ஏதாவது ஒரு வடிவில் தினந்தோறும் எடுத்துக் கொள்வதால் உடல் ஆரோக்கியம் படிப்படியாக பாதிக்கிறது.


ரத்தத்தில் நச்சுத்தன்மை அதிகரிப்பதற்கு இந்த வெள்ளைச் சர்க்கரையும் ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. 
 
வெள்ளைச் சர்க்கரையை ஒரு நாள் முழுவதும் எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் உடலில் கெட்ட கொழுப்புக்களை ஏற்படுத்தும் காரணிகள் குறைந்து உடலில் இருந்து வெளியேறுகிறது.
 
ரத்தத்தில் உள்ள நச்சுத் தன்மையும் விஷத்தன்மையும் குறைந்து ரத்தம் படிப்படியாக சுத்தம் அடைகிறது. இன்று சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருக்கும் இந்த வெள்ளைச் சர்க்கரை உடலுக்குள் செல்லாமல் இருக்கும் பொழுது கல்லீரல் மற்றும் கணைய செல்கள் பாதிக்கப்படுவதை தடுக்கிறது.
 
மேலும் தன்னைத்தானே புதுப்பிக்கவும் செய்கிறது. மேலும் எலும்புகளில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உறிஞ்சப்படுவதும் அரிக்கப்படுவதும் குறைகிறது.
 
வெள்ளை சர்க்கரையால் நமது உடலில் கலந்திருக்கும் நச்சுக்களை வெளியேற்றுவதற்கு நமது சிறுநீரகங்கள் அதிகப்படியாக வேலை செய்வதால் நாளடைவில் சிறுநீரக பாதிப்புகளும் ஏற்படுகின்றன. மேலும் ரத்த அழுத்தம் மோசமான நோய் எதிர்ப்பு மண்டலம் போன்றவையும் ஏற்படுவதற்கு காரணமாக அமைகிறது.
 
வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக தேன், பனங்கற்கண்டு, வெல்லம் போன்றவற்றை சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியமும் பன்மடங்கு 
அதிகரிக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுவை மிகுந்த பனங்கற்கண்டு பால் பொங்கல் செய்ய !!