Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தினசரி இரண்டு அத்திப்பழங்கள் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் !!

தினசரி இரண்டு அத்திப்பழங்கள் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் !!
அத்தி பழத்தில் பல வளமான வைட்டமின்கள் மற்றும் இதர சத்துக்கள் இருப்பதனால் தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வருவதன் மூலமாக உடலானது வளமாக காணப்படும்.

தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வருவதன் மூலமாக உடம்பில் ரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடல் எடை கூட வேண்டும் என்ற ஆர்வத்தில்  இருப்பவர்கள் தினசரி இரண்டு அத்திப்பழங்களை வருவதன் மூலம் உடல் எடை அதிகரிக்கும்.
 
தினமும் உணவுக்கு பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிட வந்தால் மலச்சிக்கலை நீக்கும், மேலும் இரவு தூங்குவதற்கு முன்பாக ஐந்து அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் தீராத மலச்சிக்கல் குணமடையும்.
 
நாட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வருவதன் மூலமாக வெண்குஷ்டம் வெண்புள்ளிகள் தோலின் நிறமாற்றம் ஆகியவை சரியாகும் இதனை  பவுடராக்கி பன்னீரில் கலந்து வெண் புள்ளிகள் மீது பூசிவர அவை சரியாகும்.
 
உலர்ந்த அத்திப் பழங்களை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வருவதன் மூலமாக அளவற்ற ஆண்மை வலிமையை பெறலாம். மேலும் இவற்றினை பொடி செய்து  தினமும் ஒரு ஸ்பூன் பாலில் கலந்து சாப்பிட்டு வர ஆண்மை அதிகரிக்கும். 
 
அத்திப்பழம்மானது எளிதில் ஜீரணம் அடைய கூடிய ஒன்றாகும். இதனால் கல்லீரல் மற்றும் மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை சுறுசுறுப்புடன் வைத்திருக்க அத்தி பழம் உதவுகிறது. 
 
பெருங்குடலில் ஆங்காங்கே சேர்ந்துள்ள இறுகிய கழிவுப் பொருட்களை சிறிது சிறிதாக பக்குவப்படுத்தி இளக்கி வியர்வையாகவும், சிறுநீராகவும், மலமாகவும் வெளியேற்றி குடலை கொஞ்சம்கொஞ்சமாக சுத்தம் செய்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

98 லட்சத்தை கடந்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை! – இந்தியாவில் கொரோனா!