Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Saturday, 12 April 2025
webdunia

முளைக்கட்டிய தானியங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்...!!

Advertiesment
முளைக்கட்டிய தானியங்கள்
முளைக்கட்டிய தானியங்கள் நல்ல ஆரோக்கிய பலன்களைத் தருகின்றன எனவும் மனித உடலுக்கு தேவையான ஊட்டச் சத்துக்களையும் ஆண்டி ஆக்ஸிடெண்டுகளையும் கொண்டுள்ளது.
தானியங்கள் பயறு வகைகளை நாம் பெரும்பாலும் சமைத்தே சாப்பிடுகிறோம். அப்படிச் சாப்பிடாமல் முளைகட்டியச் சாப்பிட்டால் நிறைய  சத்துகளைப் பெறலாம்.
 
முளைகட்டிய வெந்தயத்தில் வைட்டமின் சி, புரோட்டீன், நியாசின், பொட்டாசியம், இரும்புச்சத்து போன்றவை இருக்கின்றன. வெந்தயத்தில்  உள்ள மூலக்கூறுகளால் உடலில் இன்சுலின் சுரப்பு அதிகரிக்கும். அதனால் இது, சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதம், கொலஸ்ட்ரால் சேராமல் பார்த்துகொள்ளும். தொப்பை, உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் முளைகட்டிய வெந்தயத்தைச் சாப்பிடுவது நல்லது.
 
கொள்ளுப்பயறை முளைகட்டிச் சாப்பிட்டால் வைட்டமின் ஏ, பி, சி போன்ற சத்துகள் கிடைக்கும். இது கொலஸ்ட்ரால், தொப்பை, உடல்  பருமன் போன்றவற்றைச் சரிசெய்ய உதவும். நரம்பு, எலும்புக்கு ஊட்டமளிக்கும். மூட்டுவலியால் அவதிப்படுவர்கள் முளைகட்டிய  கொள்ளுப்பயறைச் சாப்பிடுவது நல்லது.
 
முளைகட்டிய பச்சைப் பயறைச் சாப்பிட்டால், அதிகப் புரதம், கால்சியம் சத்து கிடைக்கும். இது வளரும் குழந்தைகளுக்கு ஊட்டம் தரும் உணவு. அல்சரைக் குணப்படுத்துவதோடு, நோய் எதிர்ப்பு சக்தி தரும்.
 
உளுந்தை முளைக்கட்டி சாப்பிட்டால் மூட்டுவலியைப் போக்கும். சர்க்கரை நோயாளிகலும் முளைகட்டிய உளுந்தை சாப்பிடுவது நல்லது.  தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்கச் செய்யும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுவையான பன்னீர் 65 செய்ய...!!