Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பீன்ஸை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் கிடைக்கும் நன்மைகள் !!

பீன்ஸை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் கிடைக்கும் நன்மைகள் !!
, வெள்ளி, 25 மார்ச் 2022 (10:30 IST)
பீன்ஸில் வைட்டமின் பி6, தையமின், வைட்டமின் சி, இருப்பதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது.


பீன்ஸ் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டது. பீன்ஸ் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள ஃப்ளேவோனாய்டுகள் புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியை தடுத்து புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைத் தடுக்கும்.

பீன்ஸ் இரும்புச்சத்தைக் கிரகிக்கும் தன்மை பெற்றது. செரிமான சக்தியை அதிகரிக்கும். வாயுத் தொல்லையை நீக்கும். பீன்ஸில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்கும்.

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க பீன்ஸ் பெரிதும் உதவுகிறது. ஏனெனில் அதில் உள்ள கார்போஹைட்ரேட் உடலில் மெதுவாக கரைவதன் காரணமாக, இரத்தத்தில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை சேர்வதைத் தடுக்கும்.

கிராம் பீன்ஸில் நார்ச்சத்தானது அதிகம் உள்ளது. இந்த நார்ச்சத்தானது குடலின் உட்புறச் சுவர்களைப் பாதுகாத்து நச்சுத் தன்மைகளை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்று நோயைக் குணப்படுத்துவதில், பீன்ஸ் அதிகம் பயன்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நரம்பு தளர்ச்சி பிரச்சனை குணமாக உதவும் உணவுகள் !!