Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சருமம் பொலிவு பெற உதவும் சில ஃபேஸ் பேக்குகள் !!

Advertiesment
சருமம் பொலிவு பெற உதவும் சில ஃபேஸ் பேக்குகள் !!
, வியாழன், 24 மார்ச் 2022 (18:25 IST)
சருமம் பொலிவு பெற கடலை மாவு, எழுமிச்சை, சந்தனம் சேர்த்து முகத்தில் தடவவும். இதனை வாரம் 2 முறைச் செய்யலாம். இந்த ஃபேஸ் பேக்குகளை இரவில் செய்வது நல்லது.


ஃபேஸ் பேக்குகள் பயன்படுத்திய பின்பு குறைந்தது 6 முதல் 8 மணி நேரம் வரை முகத்தில் சோப்பு பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.இதில் எலுமிச்சை சேர்ப்பது மூலம் அலர்ஜி அல்லது முகவறட்சி ஏற்படுவதாக உணர்பவர்கள் எலுமிச்சைக்குப் பதிலாக தயிர் சேர்த்துக் கொள்ளலாம். ஃபேஸ் பேக்குகளை கழுவிய பின்பு சீரம் அல்லது முகக் கிரீம்களை தடவி விட்டு உறங்க செல்லலாம்.

முகத்தில் உதட்டிற்கு மேல் முடிகள் இருக்கும். இவற்றை நீக்க பச்சைப் பயிறை 2 மணி நேரம் ஊறவைத்து பின்னர் அரைத்துக் எடுத்துக் கொள்ளவும்.  இதனுடன் சந்தனப் பொடி, உலர்த்திய ஆரஞ்சுத் தோலினை பொடியாக்கி அதனையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

மேலும் எலுமிச்சை, ரோஸ் வாட்டர், கருவேப்பிலைப் பொடியையும் சேருங்கள். இந்த ஃபேஸ் பேக்கை வாரம் ஒரு முறை பயன்படுத்தலாம். இதனால் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகள் அதுவாகவே நீங்கிவிடும்.

முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மற்றும் கருமைகளை நீக்க தக்காளியை அரைத்து அதனுடன் மஞ்சள் மற்றும் சந்தனம் சேர்த்து முகத்தில் தடவலாம். சந்தனம் தான் சருமத்திற்கு மிகச் சிறந்தது. ஆனால் தூய்மையான சந்தனத்தை தேடிப்பிடித்து வாங்க வேண்டும்.

இந்த கலவையை வாரம் 2 முறை அப்ளை செய்து வர வேண்டும். எண்ணெய் சருமம் கொண்டவர்கள் 3 முறை வரை செய்யலாம். சுமார் 20 நிமிடங்கள் இந்த கலவையை தடவி விட்டு பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கறிவேப்பிலை இட்லி பொடி செய்ய !!