Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவைக்காயை வாரம் இருமுறை உணவில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் !!

Webdunia
சனி, 12 பிப்ரவரி 2022 (18:50 IST)
சர்க்கரை நோயாளிகள் கோவைக்காயை வாரம் இருமுறை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ளவேண்டும். இதன் இலை உடலுக்கு குளிர்ச்சியளிக்க கூடியது.


சர்க்கரை நோயாளிகளுக்கு கோவைக்காய் சிறந்த மருத்துவ உணவு. அதனால் வாரத்தில் இரண்டு நாட்களாவது அதை உணவில் சேருங்கள்.

தோல் நோய்களுக்கு சிறந்த மருந்து. இலையை அரைத்து சொறி, சிரங்கு, கரப்பான் போன்ற நோய் உள்ளவர்கள் பூசிக்குளிக்கலாம். சொரியாஸிஸ் நோய் உள்ளவர்கள் இந்த இலையின் சாறை எடுத்து வெண்ணெய்யில் கலந்து பூசலாம்.

காய்ச்சல் உள்ளவர்கள் கோவை இலை சாற்றை உடலில் பூசும் வழக்கம் பழங்குடி மக்களிடம் காணப்படுகிறது. வாய்ப் புண், வயிற்றுப் புண்ணை போக்க, கோவைக்காய் இலை சாற்றை இரண்டு தேக்கரண்டி அளவு பருகவேண்டும்.

வயிற்றுப் போக்கு ஏற்படும்போது இதன் சாறை இரண்டு தேக்கரண்டி மோரில் கலந்து பருகவேண்டும். பூச்சிகடித்தால் அந்த இடத்தில் இந்த சாறை தேய்க்கலாம்.

உடலில் ஏற்படும் மூட்டு வீக்கம் மற்றும் அடிப்பட்ட வீக்கங்களுக்கு கோவை இலையை, ஆமணக்கு எண்ணெய்யில் வதக்கி கட்டவேண்டும். வீக்கங்கள் குறைந்துவிடும்.

கோவைக்காயில் பீட்டாகரோட்டின் மற்றும் வைட்டமின் பி சத்துக்கள் நிறைந்துள்ளன. உடல் எடையை குறைக்கும் சக்தியும் இதற்கு இருக்கிறது.

கோவைப்பழம் வாய்ப்புண்கள் மற்றும் பல் வலிக்கு நல்ல மருந்தாகும். பழத்தை மென்று வாய்கொப்பளித்தால் போதுமானது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தக்காளியில் இருக்கும் வைட்டமின் சத்துக்கள் என்னென்ன?

முழங்கால் செயற்கை தசைநார் சிகிச்சை! தமிழகத்தில் முதலிடம்! – ரெலா மருத்துவமனை!

சோம்பை உணவில் சேர்த்து கொள்வதால் ஏற்படும் பயன்கள்..!

பிரைடு ரைஸ் சாப்பிடுவதால் உடல்நலத்திற்கு ஏற்படும் தீங்குகள்..!

உடலுக்கு தேவையான புரதச் சத்துக்கள் உணவுகள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments