Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உணவில் அடிக்கடி கேரட் சேர்த்து கொள்வதால் ஏற்படும் நன்மைகள்..!!

உணவில் அடிக்கடி கேரட் சேர்த்து கொள்வதால் ஏற்படும் நன்மைகள்..!!
உணவில் அடிக்கடி கேரட்டை சேர்த்துக் கொள்வதனால், முதுமையில் ஏற்படும் கால்சியம் சத்துக் குறைபாடு, தலைமுடி உதிர்வு, எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

அல்சர் நோய் உள்ளவர்கள், காரம் சாப்பிட்டால் வயிற்று வலி வருபவர்கள் கேரட்டினை  நன்கு சாறு பிழிந்து வாரத்தில் மூன்று தடவை வீதம் இரண்டு மாதம் சாப்பிட்டால் போதும் வயிறு மற்றும் குடல் சம்மந்தமான நோய்கள்  எல்லாம் குணம் அடையும்.
 
வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் வாரம் ஐந்து நாட்கள் மட்டும் கேரட் சாறினை சர்க்கரை மற்றும் உப்பு சேர்க்காமல் அருந்தி வந்தால் வாய்  துர்நாற்றம் போய்விடும். 
 
கேரட் சாப்பிடுவதால் ஆண்மை சக்தி அதிகரிக்கும். எனவே, அதனை வேகவைத்து அதனுடன் முட்டை மற்றும் தேன் கலந்து சாப்பிட்டால்  உடலுக்கு நல்லது.
 
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கேரட்டை பசும் பாலில் காய்ச்சி, காய்ந்த திராட்சைப் பழம் மற்றும் தேன் கலந்து சாப்பிட  வேண்டும்.
 
ஜீரணக் கோளாறுகள் மற்றும் உடல் எலும்புகள் உறுதியாக கேரட் உடன் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டு வந்தால் அனைத்து  பிரச்சனைகளும் நீங்கும்.
 
பெண்களுக்கு மாதவிலக்கு நேரங்களில் ஏற்படும் உதிரப்போக்கு காரணமாக உடம்பில் விட்டமின் இழப்பு ஏற்படுகின்றது. இதனை சரிசெய்ய கேரட்டை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அத்துடன், பெண்களின் மெனோபாஸ் காலங்களில் ஏற்படும் பிரச்சைனைகளையும் கேரட்  குணப்படுத்தும்.
 
கேரட்டில் கரோட்டின் என்கின்ற உயரிய சத்துக்கள் உள்ளது. இவை நமது உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகப்படுத்துகிறது. மேலும் செரிமானத்தை தூண்டி நல்ல ஜீரண சக்திதியை தருகின்றது. 
 
கேரட்டில் புற்று நோயை வரவிடாமல் செய்கின்ற நோய் தடுப்பு ஆற்றல் மட்டுமே உள்ளது. தினமும் கேரட்டை தவறால் சாப்பிட்டு வரவேண்டும். இதானல் அதில் உள்ள வைட்டமின் சி, எலும்புகளை வலுவாக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உடல் எடையையும் விரைவில் குறைக்க உதவும் வாழைத்தண்டு...!!