Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அன்றாடம் உணவில் வாழைப்பூவை சேர்ப்பதால் உண்டாகும் பயன்கள் !!

அன்றாடம் உணவில் வாழைப்பூவை சேர்ப்பதால் உண்டாகும் பயன்கள் !!
வாழைப்பூவில் வைட்டமின் பி அதிகம் உள்ளது. இந்தப்பூவை அடிக்கடி சமைத்து உட்கொண்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய், வயிற்றுவலி மற்றும்  குடல்புண், ரத்தபேதி, மூலநோய் ஆகியவை குணமாகும்.

வாழைப்பூ பல சத்துகளை தன்னுள் கொண்டுள்ளது. குறிப்பாக பொட்டாசியம் சத்து வாழைப்பழங்களில் அதிகம் நிறைந்துள்ளது. கை, கால் எரிச்சலுக்கு  வாழைப்பூவை இடித்து, அதில் விளக்கெண்ணெய் விட்டு வதக்கி, பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் ஒற்றடமிட்டு கட்டலாம். 
 
வெள்ளைப்படுதலால் பெண்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகின்றது. இவர்கள் வாழைப்பூவை ரசம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல்  கட்டுப்படும்.
 
வாழைப்பூவை இடித்து சாறு பிழிந்து, அதில் சிறிதளவு பனங்கற்கண்டு கலந்து குடித்து வந்தால் வெள்ளைப்படுதல், பெரும்பாடு, வயிற்றுக்கடுப்பு போன்றவை  நீங்கும்.
 
வாழைப்பூ சாற்றுடன் கடுக்காய் பொடி சேர்த்து குடிக்க மூலநோய் குணமாகும். வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்து வந்தால் ரத்தமூலம் குணமாகும். தாது விருத்தியடையும்.
 
வாழைப்பூவை வேகவைத்தோ அல்லது பொரியல் செய்தோ அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும். அஜீரணம் இருந்தாலும் தீரும்.
 
வரமொருமுறை வாழைப்பூவை சமைத்து சாப்பிடுவதால் நாள் முழுவதும் சுறுசுறுப்பு, உற்சாகம் நிறைந்திருக்கும். மூளை எப்போதும் விழிப்புணர்வுடன்  இருக்கச்செய்யும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கூந்தலில் ஏற்படும் வறட்சியை போக்க உதவும் அரிசி கழுவிய நீர் !!