Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொத்தமல்லி மருந்தாகும் விதம் பற்றி தெரிந்துக்கொள்வோம் !!

Advertiesment
கொத்தமல்லி மருந்தாகும் விதம் பற்றி தெரிந்துக்கொள்வோம் !!
கொத்தமல்லி இலையை உணவில் அடிக்கடி சேர்த்து உண்ணுவதால் வயிற்றுப்புண் குணமாவதோடு விந்து வெளியேறி வீணாகுதல் தவிர்க்கப் பெறும். 


கொத்தமல்லி  இலையும், விதைச் சூரணமும் தாராளமான உணவில் சேர்த்துக் கொள்வதால் விந்தவைக் குறைபாடுகள் விலகிப்போகும்.
 
* கொத்தமல்லி இலைச்சாறு ஒன்று முதல் இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்து புளிப்பில்லாத புதிய மோரில் கலந்து உள்ளுக்குக் குடிப்பதால் அசீரணத்தை அகற்றும், வயிற்றில் சேர்ந்த வாயுவை வெளியேற்றும் இருமலைத் தணிக்கும்.
 
* கொத்தமல்லி இலையை மைய அரைத்து நெற்றிக்கு பற்றாகப் போட காய்ச்சல் தலைவலி, ஒற்றைத் தலைவலி மட்டுப்படும்.
 
* கொத்தமல்லி விதைச் சூரணத்தை இரண்டு கிராம் அளவு எடுத்து நீரிலிட்டு உடன் பனங்கற்கண்டு சேர்த்துக் கொதிக்கவிட்டு எடுத்து ஆறவைத்துக் குடிக்க அது  ஒரு சிறு நீர்ப்பெறுக்கியாக பயன்படுவதோடு சிறு நீரகத்துக்கு பலம் தந்து செம்மையாகச் செயல்படச் செய்ய உதவும், சிறு நீர்த் துரையில் ஏற்படும் எரிச்சல், புண்  ஆகியவையும் குணமாகும்.
 
* கொத்தமல்லி விதைச் சூரணத்தை இளஞ்சூட்டில் பச்சை வாடை போகுமாறு வறுத்து இரண்டு கிராம் அளவு தேனிலோ மோரிலோ சேர்த்துக் குடிக்க ரத்தம் கலந்து  போகும் குருதிக் கழிச்சல், அசீரணக் கழிச்சல் ஆகியன குணமாகும்.
 
* கொத்தமல்லி விதைச் சூரணம் வெருகடி அளவும் அதன் சம அளவு சோம்புச் சூரணமும் சேர்த்து சிறிது சர்க்கரை கலந்து சாப்பிட இடைவிடாத ஏப்பம்  நீங்குவதோடு இதயமும் பலம் பெறும்.
 
* கொத்தமல்லி இலையை சிறிது விளக்கெண்ணெய் விட்டு வதக்கி வற்றாத வீக்கம், கரையாத கட்டிகள் ஆகியவற்றின் மேல் வைத்துக் கட்டி வைக்க வீக்கம் வற்றி  கட்டிகளும் கரைந்து போகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

83 லட்சத்தை நெருங்கிய குணமடைந்தோர் எண்ணிக்கை! – இந்திய கொரோனா நிலவரம்!