Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்த கீரையில் இத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளதா...?

இந்த கீரையில் இத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளதா...?
வாய் மற்றும் வயிற்றில் புண்கள் உள்ளவர்கள் மணத்தக்காளி கீரையை பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிட்டு வருவதன் மூலமாக வாய்ப்புண் மிக விரைவில் குணமடையும்.

தொண்டை பகுதியில் வறட்சி ஏற்படுகிறது. வறட்சி ஏற்படுவதன் மூலமாக தொண்டை கட்டி கொள்வதோடு மட்டுமல்லாமல் தொண்டை பகுதியில் வீக்கம் மற்றும் புண்கள் ஏற்படுகின்றன. இந்த பிரச்சனை உள்ளவர்கள் மணத்தக்காளி கீரை இலை பக்குவம் செய்து சாப்பிட்டு வருவதன் மூலமாக நிவாரணம் பெறலாம்.
 
ஜூரம், காய்ச்சல் போன்ற பிரச்சினைகளினால் அவதிப்படுபவர்களுக்கு உடல் சூடு அதிகமாகும். மேலும் உடல் பலவீனமாகும், கைகால் வலியானது உண்டாகும். இவர்கள் மணத்தக்காளி செடியின் இலைகளை நன்றாக கசக்கி சாறு பிழிந்து வைத்துக் கொள்ளவும். அந்த சாற்றினை நெற்றியிலும் கை கால்களில் தேய்த்து வருவதன் மூலமாகவும் உடலுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.
 
காச நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி மணத்தக்காளி கீரையை அல்லது அதன் பழங்களையும் சாப்பிட்டு வருவதன் மூலமாக காச நோயின் கொடுமையில் இருந்து விடுபடலாம்.
 
புற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மணத்தக்காளி கீரை தினசரி சாப்பிட்டு வருவதன் மூலமாக இதனுடைய தீவிர தன்மையிலிருந்து குணமடையலாம்.
 
மணத்தக்காளிக் கீரையினை வாரத்தில் இரு முறையேனும் சாப்பிட்டு வருபவர்களுக்கு உயிரணுக்களின் வலிமை அதிகமாகும். மேலும் இது உடலில் ஓடும் நரம்பு மற்றும் ஆண்களின் இனப்பெருக்க உறுப்புகளை வலுப்படுத்துகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு தரும் இஞ்சி !!