Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Thursday, 24 April 2025
webdunia

முகத்தில் காணப்படும் கருந்திட்டுக்களை காணாமல் போக செய்யும் குறிப்புக்கள் !!

Advertiesment
முக பராமரிப்பு
தேங்காய் பால் 2 ஸ்பூன், கடலை மாவு ஒரு ஸ்பூன் எடுத்து, இரண்டையும் கலந்து பசைபோல ஆக்கிக்கொள்ள வேண்டும். இந்த பசையை முகத்தில் பூசிக்கொண்டு, உலர்ந்ததும் தண்ணீர் கொண்டு கழுவிவிட வேண்டும். வாரம் இருமுறை இப்படி செய்து வந்தால் முகம் பிரகாசமாகும்.

இளநீரில் உள்ள வழுக்கை தேங்காயை நன்கு அரைத்து, அதனோடு சிறிதளவு இளநீர் கலந்து முகத்தில் கீழ் இருந்து மேல்நோக்கி பூசி, அது உலர்ந்ததும் நீர் கொண்டு சுத்தம் செய்துகொள்ள வேண்டும். தினமும் இப்படி செய்து வந்தால் மாசு மருவின்றி முகம் மிளிரும். கரும் புள்ளிகள் இருந்தால் கூட அவை காணாமல் போய்விடும். 
 
பாசிப்பருப்பு ப்ளீச் முகத்தில் சிலருக்கு ஆங்காங்கே கருப்பு தீவுகள் போல் திட்டுகள் தோன்றும். இதற்கு பாசிப்பருப்பு சிறந்த ப்ளீச் போல செயல்படுகிறது. பாசிப் பருப்பு, கசகசா, பாதாம், பிஸ்தா, துளசி, ரோஜா மொட்டு இவற்றை நன்றாக காயவைத்து பவுடர் பண்ணி வைத்துக் கொள்ளுங்கள். இந்த பவுடரை சிறிது எடுத்து, தினமும் பாலுடன் சேர்த்து குழைத்து, முகத்தில் பூசுங்கள். 15 நிமிடத்துக்கு பிறகு கழுவினால் முகத்தின் கருந்திட்டுக்கள் காணாமல் போகும்.
 
ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சம அளவு எடுத்து, கலக்கி பஞ்சில் முக்கி முகத்தில் பூசவேண்டும். இதனால் முகம் நல்ல பிரகாசமாகவும் குளுமையாகவும் இருக்கும். 
 
கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம்,1 உலர்ந்த திராட்சை பழம் இவற்றை ஒரு நாள் முழுவதும் வென்னீரில் ஊற வைக்க வேண்டும்.அதை பிறகு அரைத்து இந்த கலவையுடன் அரை டீஸ்பூன் பப்பாளி பழக்கூழை கலந்து கொள்ளவும். இதை முகத்திற்கு பேஸ் பேக் போல போட்டு 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவவேண்டும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வீட்டிலேயே சிக்கன் ஷவர்மாவை எப்படி செய்வது....?