அஸ்வகந்தா முழு செடியுமே மருத்துவ குணங்கள் கொண்டது. ஆயுர்வேத மருத்துவத்தில், அஸ்வகந்தாவின் வேர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
உடல் வலிமையை பெருக்கி, மன அழுத்தம் அலர்ஜியை போக்கி, பிரச்சனைகளை எதிர்கொள்ளக்கூடிய சக்தியை அழித்து, அனைத்து சூழ்நிலையிலும் போராடக்கூடிய சக்தியை தரவல்லது.
அமுக்கரா மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. மூளையின் வயோதிகம் போன்றவற்றிற்கு பெரிதும் உதவுகின்றது எனவும், உடலில் உள்ள உஷ்ணத்தை வெளியேற்றி, உடலை உற்சாகமாகவும், ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
அமுக்கரா திறமையையும், உடல் வலிமையையும் அதிகரிகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மூளையின் செயல்பாட்டினை பெருக்கும். ஞாபக சக்தி மற்றும் திறமைய அதிகரிக்கும்.
நரம்புகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். மூட்டுகளின் வீக்கத்தை குறைக்கும். குதிரை போன்ற உடல் வலிமையை தரும். அஸ்வகந்தா மன அழுத்தம், மனப்பதட்டம், தூக்கமின்மை, நரம்பு கோளாறு போன்ற குறைபாடுகளில் இருந்து விரைவில் வெளியேற உதவுகிறது.
அமுக்கிரா உடன், சுக்கு சேர்த்து, அரைத்து கட்டி, வீக்கம் முதலியவற்றிற்கு, பற்று போடலாம். முப்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் ஏற்படும் கை, கால் சோர்வு இவைகளை குணப்படுத்த அமுக்கரா பயன்படுகிறது.மேலும் அதிக வலிமையையும், சக்தியினையும் தருகிறது.