வெட்டிவேர் அதிக வாசம் உடையதாகவும், மருத்துவ தன்மை அதிகம் உள்ளதாகவும் இருக்கிறது. வெட்டிவேர் வாசனையை சுவாசிப்பதால் தலைவலி நீங்கும், உடலில் புத்துணர்ச்சி ஏற்படும்.
வெட்டிவேர் கசாயம் சிக்குன்குனியா காய்ச்சலுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. வெட்டிவேரை வேகவைத்து ஆவி பிடித்தால் மலேரியா காய்ச்சல் தீரும்.
காய்ச்சலுக்கு பின்பு ஏற்படும் உடல் சோர்வுக்கு வெட்டி வேரை நீரில் இட்டு கொதிக்கவைத்து பருகவேண்டும். வெட்டிவேரை தண்ணீர் விட்டு அரைத்து பசையாக செய்து கொண்டு பல்வலி, தலைவலி போன்றவற்றுக்கு நிவாரணியாக பயன்படுத்தலாம்.
வெட்டிவேர் பசையாக அரைத்து தீக்காயங்கள், தலைவலி, பாம்பு கடி போன்றவற்றுக்கு பற்றுப் போட்டால் எளிதில் குணமாகும். வெட்டிவேர் போட்ட காய்ச்சிய நீரை வாய் கொப்பளித்தால் வாய் புண் ஆறும், கிருமிகள் அழியும்.
முகத்தில் ஏற்படும் பருக்களை குறைக்க வெட்டி வேர் பயன்படுகிறது. வெட்டிவேர் குளிர்ச்சியைத் தருவதுடன் நல்ல நறு மணத்தையும், உற்சாகத்தையும் தரக்கூடியது.
கால் எரிச்சல், கால் வலி போன்றவற்றிற்கும் வெட்டிவேரை தேங்காய் எண்ணெயில் இட்டு காய்ச்சி, இரண்டு நாட்கள் கழித்து வடிகட்டி தொந்தரவு தரும் இடங்களில் பூசலாம்.