தினமும் வெறும் நான்கு பாதாம் சாப்பிட்டு வந்தால் நடக்கும் அதிசயத்தை காணலாம். பாதாமில் வைட்டமின் இ,கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் பல சத்துக்கள் உள்ளன.
பாதாமில் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் நல்ல அளவில் உள்ளது. அதிலும் தினமும் ஒரு கையளவு பாதாம் சாப்பிட்டால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலின் அளவை சீராக வைக்க உதவும்.
நார்ச்சத்து அதிகம் இருக்கும் பாதாமை சாப்பிட்டால், அது குடலியக்கத்தை சீராக வைத்து, குடல் புற்றுநோய் உண்டாவதைத் தடுக்கும். அதுமட்டுமின்றி, இதில் வைட்டமின் ஈ, பைட்டோ கெமிக்கல் மற்றும் ஃப்ளேவோனாய்டுகள் அதிகம் இருப்பதால், மார்பக புற்றுநோயை உண்டாக்கும், செல்கள் வளர்வதை தடுக்கும்.
பாதாம் மட்டும் தனியாகவோ அல்லது பேரீட்சை மற்றும் கிஸ்மிஸ் பழத்துடனோ சேர்த்துச் சாப்பிடலாம். காலையில் பத்து பாதாம் மற்றும் மாலையில் பத்து என்று எடுத்துக் கொள்ளலாம்.
இதய நோய் உள்ளவர்கள் தினமும் பாதாம் சாப்பிடுவதால் இதய நோய் குணமாகும் மற்றும் இதய நோய் வராமல் தடுக்கும். கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் தினமும் சாப்பிட்டு வந்தால் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.
மலச்சிக்கல் உள்ளவர்கள் தினமும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும். பாதாமில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் புற்று நோயை கட்டுப்படுத்துகிறது.
தினமும் பாதாம் சாப்பிடுவதால் தலைமுடி உதிர்வதை தடுக்கலாம். பாதாமை ஊற வைத்து சாப்பிடுவதால் உடல் எடை அதிகமாக இருக்கும் நபர்களுக்கு உடல் எடையை குறைக்கிறது.