Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தலைமுடி ஆரோக்கியத்தை மீட்டெடுக்க உடலுக்கு தேவையான சத்துக்கள் என்ன...?

Advertiesment
தலைமுடி ஆரோக்கியத்தை மீட்டெடுக்க உடலுக்கு தேவையான சத்துக்கள் என்ன...?
, புதன், 23 பிப்ரவரி 2022 (18:22 IST)
புரதம், இரும்பு, துத்தநாகம் மற்றும் பயோட்டின் நிறைந்த, பயறு வகைகளிலும் ஏராளமான ஃபோலிக் அமிலம் உள்ளது. தலைமுடி ஆரோக்கியத்தை மீட்டெடுக்க உடலுக்கு ஃபோலிக் அமிலம் தேவை.


கீரை இரும்புச்சத்து நிறைந்ததாகவும், இது கூந்தலுக்கு இயற்கையான கண்டிஷனராக செயல்படுகிறது. கீரை  ஒமேகா 3 அமிலங்கள், மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் மற்றும் இரும்பு ஆகியவற்றை வழங்குகிறது.

பச்சை காய்கறிகளில் போதுமான அளவு இரும்புச்சத்து உள்ளது. தினமும் ஒரு விதமான பச்சை காய்கறிகள் சாப்பிடுவது போதுமானது. ஜின்க் கனிமம்  முடி வளர்வதற்கு முக்கியமானது. அனைத்து பீன்ஸ் வகைகளிலும் ஜின்க் உள்ளது.

முட்டைகளில் பயோட்டின் எனப்படும் வைட்டமின் B நிரம்பியுள்ளது, இது முடி வளர உதவுகிறது மற்றும் உடையக்கூடிய விரல் நகங்களை பலப்படுத்துகிறது.

சூரிய ஒளியிலிருந்து வைட்டமின் D கிடைக்கிறது. தினமும் காலையில் குறைந்தது 20 நிமிடங்கள் நம் உடலில் படுவது போதுமானது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள் என்ன தெரியுமா...?