Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 23 April 2025
webdunia

அனைத்து பாகங்களும் அற்புத மருத்துவ பயன்கள் நிறைந்த துத்தி !!

Advertiesment
அனைத்து பாகங்கள்
புண்கள் குணமாக: துத்தி இலைச்சாற்றுடன் சிறுதளவு மஞ்சள் தூள் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூசவேண்டும். கட்டிகள் உடைய: இலைச்சாற்றைப் பச்சரிசி மாவுடன் கலந்து, கிண்டி, கட்டிகளின் மீது வைத்துக் கட்ட வேண்டும்.

வெள்ளைப்படுதல் குணமாக: துத்தி இலைகளை நெய்யில் துவட்டி சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வரலாம். அல்லது இலையை காரமில்லாமல் பொரியலாகச்  செய்து சாதத்துடன் பிசைந்து, 40 முதல் 120 நாட்கள் வரை சாப்பிட வேண்டும். இந்த காலத்தில், புளி, காரம், மாமிசம் நீக்கிய உணவைச் சாப்பிடவேண்டும்,  புகைப்பிடித்தல் கூடாது.
 
நாட்பட்ட வெளிமூலம் இரத்த மூலம் உள்ளவர்கள், துத்தி இலையை ஆமணக்கு எண்ணெய்யில் வதக்கி ஒரு வெற்றிலையில் வைத்து ஆசனவாயில் வைத்து  கட்டிக்கொண்டு வர நாட்பட்ட மூல வியாதி குணமாகும்.
 
துத்தி பூவை நிழலில் நன்றாக உலர்த்தி பொடியாக்கி அதனுடன், பாலும் பனங்கற்கண்டும் சேர்த்து பருகிவந்தால் நுரையீரல் கபம், இருமல், இரைப்பு, காசநோய், இரத்த வாந்தி முதலியவை குணமாகும்.
 
துத்திக்காயில் உள்ள விதைகளை இடித்து பொடியாக்கி, அதனுடன் கற்கண்டும், தேனும் சேர்த்து சாப்பிட்டு வர வெண்மேகம், உடற்சூடு, கைகால்களில் படரும் சரும நோய்கள், வெள்ளை படுதல் ஆகியவையும் குணமாகும்.
 
கடைசியாக முக்கியமான விஷயம், துத்திபூவை, காம்பு, மொக்குகளோடு சேர்த்து பறித்து அதை சிறிது கருப்பட்டி சேர்த்து கஷாயமாக்கி குடித்தால் ஆண்மை  பெருகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வீட்டிலேயே செய்யக்கூடிய அற்புத பலன்தரும் அழகு குறிப்புக்கள்...!!