Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குடல்களில் நிறைந்திருக்கும் நச்சுக்களை வெளியேற்றும் ஆவாரம் பூ !!

Advertiesment
Aavaram Poo
, புதன், 17 ஆகஸ்ட் 2022 (17:25 IST)
ஆவாரம் பூக்களையும், இலையையும் காய வைத்து பொடி செய்து, காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தம் அடையும். ஈரல் சம்மந்தமான நோய்கள் குணமாகும்.


ஆவாரம் பூக்களை காயவைத்து காலையில் ஆவரம் டீ தயாரித்து அருந்தலாம். இதுவும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும். இதனுடன் நாகப்பழத்தின் கொட்டையையும் சேர்த்து பயன் படுத்தலாம் .அதிக பயன் தரும்.

ஆவாரம் மூலிகையின் அனைத்து பாகங்களும் நீரிழிவு, எலும்புருக்கி, கண், மூலம், நாள்பட்ட புண்கள், சிறுநீரகக் கோளாறுகள், வெள்ளை வேட்டை நோய்களையும் குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.

ஆவரம் பட்டை, கஸ்தூரி மஞ்சள், ஒரு மிளகாய், சிறிது சாம்பராணி, நல்லெண்ணெய் போன்றவைகளை சேர்த்து ஆவாரைத் தைலம் காய்ச்சி, அதை தோலில் தடவி வந்தால் தோல் வெடிப்பு, வறட்சி, எரிச்சல் போன்றவை குணமாகும்.

ஆவாரம் பூக்களை பச்சையாக சாப்பிட்டு வந்தால் வயிறு மற்றும் குடல்களில் நிறைந்திருக்கும் நச்சுக்கள் முழுவதும் வெளியேறும். அதோடு வயிறு சம்மந்தமான நோய்களும் குணமாகும்.

ஆவாரம்பூ நீரிழிவு, வறட்சி, கற்றாழை நாற்றம் ஆகியவற்றைப் போக்கும். இலை, பூ, காய், பட்டை, வேர் ஆகியவை நீரிழிவு, வெள்ளை, உட்கரு, புண், எலும்பைப் பற்றிய சுரம், நீர் வேட்கை போன்றவற்றை நீக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளை போக்க உதவும் அழகு குறிப்புகள் !!