Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அற்புத மருத்துவ குணங்கள் கொண்ட உத்தாமணி

அற்புத மருத்துவ குணங்கள் கொண்ட உத்தாமணி
தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வேலியோரங்களில் படர்ந்து கிடக்கும் அற்புதமான மூலிகைதான் வேலிப்பருத்து. இது இதய வடிவ இலைகளை கொண்டுள்ளது. இதற்கு ‘உத்தாமணி’ என்ற பெயரும் உண்டு. சித்த மருத்துவத்தில் பெரும்பாலும் உத்தாமணி என்றே குறிப்பிடுகிறார்கள்.
ஆஸ்துமா, வீசிங், பித்தம், கால் கை குடைச்சல், ரத்த அழுத்தம் போன்ற மேலும் பல வியாதிகளை போக்கவல்லது வேலிப்பருத்தி. இதன் வேர், இலை ஆகியவை மருத்துவ பயனுடையது.
 
வேலிப்பருத்தி இலைச்சாறுடன் சுக்கு, பெருங்காயம் சேர்த்து காய்ச்சி இளஞ்சூட்டில் பற்றிட வாதவலி, வீக்கம் குணமாகும். தொடக்க நிலையில் இருக்கும்  யானைக்கால் நோய் இருந்தால் 48 நாட்களில் குணமாகும்.
 
5 கிராம் அலவு வெலிப்பருத்து வேரை பாலில் அரைத்து கலக்கி காலையில் 3 நாட்களுக்கு கொடுக்க கரப்பான், கிரந்தி, சூலை, பிடிப்பு, வாயு முதலியவை  போகும்.
webdunia
இதன் வேரை உலர்த்தி தூள் செய்து 2 சிட்டிகை அளவுவரை பாலில் கலந்து கொடுக்க குழந்தைகளின் வாயு நீங்கி பேதியாகும். பேதியுடன் பூச்சி, கிருமிகள்  நீங்கும். வேலிப்பருத்தி இலையை வதக்கி துணியில் கட்டி ஒத்தடம் கொடுக்க கீல்வாதம், முடக்கு வாதம், வாத குடைச்சல், இடுப்பு வலி முதலியன  குணமாகும்.
 
குழந்தைகளுக்கு நுரையீரலில் கபம் அதிகரித்து சுவாசம் மிகுந்திருந்தால் வேலிப்ப்பருத்தி இலையையும், துளசியும் சேர்த்து அதனுடன் கல்உப்பு ஒன்று சேர்த்து நன்றாக கசக்கி பிழிந்தெடுத்த சாற்றில் 1 தேக்கரண்டி அளவு கொடுக்க சிறிது நேரத்தில் கபம் வெளியாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சொரியாசிஸ் நோய் வரக் காரணங்களும் அறிகுறிகளும்....!