Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நேபாளத்தில் ஒரே நேரத்தில் வெள்ளம், நிலச்சரிவு: இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு!

Advertiesment
Rescue Operations for Stranded Indians Amid Severe Flooding in Nepal

Siva

, திங்கள், 30 செப்டம்பர் 2024 (18:15 IST)
நேபாளத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும்பொருட்டு அங்குள்ள இந்திய தூதரகம் அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது.

நேபாளத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வரும் நிலையில் அங்கு பெரும்பாலான நகரங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மற்றும் மத்திய நேபாள பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது, போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

இந்நிலையில், நேபாளத்தில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க தூதரகத்துக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. நேபாளத்தில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக மீட்குமாறு அங்குள்ள இந்திய தூதரகத்துக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது.

நேபாளத்தில் உள்ள இந்தியர்கள் +977-9851316807 என்ற அவசர எண்ணில் தொடர்பு கொண்டு உதவி கோரலாம் என்றும்,+977-9851107021, +977-9749833292 என்ற அதிகாரிகள் எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது


Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சர்ஜரி செய்தபோது பெண்ணின் தலைக்குள் ஊசியை மறந்து வைத்த மருத்துவர்: அதிர்ச்சி தகவல்..!