கர்நாடக மாநிலத்தில் வரும் மே மாதம் 12ஆம் தேர்தல் என்று இன்று காலையில் தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவிப்பு செய்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள மக்களுக்கு தேர்தல் குறித்தும், வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் சுவர் என்று கருதப்பட்ட ராகுல் டிராவிட்டை தேர்தல் ஆணையம் நல்லெண்ண தூதராக நியமித்துள்ளது. தேர்தல் குறித்த விளம்பரங்களில் டிராவிட் நடித்து மக்களுக்கு தேர்தலில் வாக்களிப்பதன் அவசியத்தை அவர் எடுத்து கூறுவார் என்று தெரிகிறது.
ஏற்கனவே கர்நாடக போக்குவரத்து போலீசார் டிராவிட்டை வைத்து ஹெல்மெட் போட வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு படம் எடுத்தது நல்ல ரிசல்ட்டை கொடுத்துள்ளதை அடுத்து தேர்தல் ஆணையமும் தற்போது அவரை பயன்படுத்தி கொள்ள முடிவு செய்துள்ளது. வெகுவிரைவில் ராகுல் டிராவிட்டின் குறும்படம் தொலைக்காட்சி மற்றும் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.