Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சாதகமாக செயல்பட்டாரா நடுவர்?... கிளம்பிய சர்ச்சை!

Advertiesment
மும்பை இந்தியன்ஸ்

vinoth

, வெள்ளி, 2 மே 2025 (10:57 IST)
நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 217 ரன்கள் சேர்த்தது. இதன் பின்னர் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 117 ரன்கள் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 100 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி 14 புள்ளிகளோடு முதல் இடத்துக்கு சென்றுள்ளது.

இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மா சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். ஆனால் அவர் செய்த ஒரு செயலால் தற்போது சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது. ராஜஸ்தான் பவுலர் பரூக்கி வீசிய பந்தில் அவருக்கு எல் பி டபுள் யூ முறையில் விக்கெட் கொடுக்கப்பட்டது.

இதை எதிர்த்து அவர் DRS கேட்கலாமா என எதிர்முனையில் இருந்த ரிக்கல்ட்டுனுடன் ஆலோசித்து DRS கேட்டார். ஆனால் அவர் கேட்கும் போது நேரம் முடிந்து சரியாக 0 வினாடிகள் என்று காட்டப்பட்டது. அதனால் அவரின் ரிவ்யூ நேரம் முடிந்துவிட்டதாகவேக் கருதவேண்டும். ஆனால் நடுவர் அவரின் ரிவ்யூவை ஏற்றுக் கொண்டார். மூன்றாம் நடுவர் ரிப்ளையில் பார்த்து அதை ‘நாட் அவுட்’என அறிவித்தார். இதன் காரணமாக நடுவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சார்பாக செயல்பட்டுள்ளதாக ரசிகர்கள் ,குற்றம் சாட்டி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மின்னல் வேகக் கேட்ச்… பந்தைத் தேடிய கேமராமேன்… நேற்றையப் போட்டியில் நடந்த சுவாரஸ்யம்!