Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புத்தாண்டு ராசிபலன் 2024: கும்பம் ராசியினருக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும்?

Advertiesment
Kumbam
, வியாழன், 28 டிசம்பர் 2023 (08:58 IST)
எந்த கடினமான வேலைகளையும் உழைப்பின் மூலமாக செய்து முடிக்கும் திறன் கொண்ட கும்ப ராசி அன்பர்களே நீங்கள் சனியை ராசிநாதனாகக் கொண்டவர்கள்.



இந்த ஆண்டு பொதுவாகத் தீமைகள் இருக்குமானாலும் பாதிப்பு பெரிதாக இருக்காது. சில நன்மைகள் சிறப்பாக உண்டாக வாய்ப்புண்டு. பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. உடல் நலம் பாதிக்கப்படலாம். குடும்ப நலம் பாதிக்காமல் இருக்க வாய்ப்புகள் அதிகம். நன்மைகளும் உண்டு; தீமைகளும் உண்டு. ஆனால் நன்மைகள் சற்றுத் தூக்கலாகவே நடக்க வாய்ப்புண்டு. பொருளாதார நிலையில் சரிவு ஏற்படாது. உடல் நலனை கவனித்துக் கொள்ளுங்கள். +குடும்ப நலம் சீராக இருக்கும். உங்களுடைய கௌரவம் பாதிக்கப்படாமல் இருக்க இடமுண்டு. நல்லோர் ஆசியை விரும்பிப் பெறுங்கள். அன்றாடப் பணிகளுச்குக் இடையூறு இருக்காது. ஏற்படும் கஷ்டங்கள் சற்று மட்டுப்பட வாய்ப்புண்டு. பெரியோர் ஆதரவு கிடைக்கும். உங்களுடைய சௌகரியமான வாழ்வுக்குத் தேவையான அனைத்தும் கிடைக்கும்.

உத்தியோகத்தில் கெடுபிடி இருக்கலாம். மேலதிகாரிகளின் குறிப்பறிந்து நடந்து கொண்டால் தொல்லை இல்லை. காவல், ராணுவம் போன்ற துறைகளில் உள்ளோர் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். அவசியமிருந்தாலன்றிப் பயணத்தை மேற் கொள்ள வேண்டாம். நன்மைகள் மிகுதியாக நடக்க வாய்ப்புண்டு. அவ்வப்போது சில தொல்லைகள் தவிர்க்க முடியாமற் போகும்.

வியாபாரிகளுக்கு அளவான லாபம் வரும். தொழிலில் சிறு சிக்கல் ஏற்படலாம். விவசாயிகளுக்கு ஏதேனும் ஒரு குறை உண்டாகலாம். வழக்குகளில் சம்பந்தப் பட்டவர்களுக்கு வீண் செலவுகள் உண் டாகலாம். பொருளாதார நிலை சீராக இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கவும் வாய்ப்புண்டு.

அரசியல்வாதிகள் அடக்கமாக நடந்து கொண்டு அவப்பெயர் வராமல் காத்துக் கொள்வது அவசியம். பெரியோர் நல்லாசியைப் பெற்று வந்தால் நலம் விளையும். உடல் நலனில் அக்கறை இருக்கட்டும். முன்கோபம் காரணமாக சில நல்ல சந்தர்ப்பங்கள் பாழாகி விடுமாதலால் எச்சரிக்கையாக இருக்கவும். உங்களுடைய கௌரவம் சிறப்பாக இருக்கும்.
பெண்களுக்கு குடும்ப நலம், தாம்பத்யம் எல்லாம் சீராக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கலாம். பயணம் ஒன்றை மேற்கொள்ள வேண்டி வரலாம். அதனால் சிறிதளவு பயனும் ஏற்படலாம். பொருளாதார நிலையில் தான் அவ்வப்போது இக்கட்டு உண்டா கும். காரியங்களில் வெற்றி வாய்ப்பு அதிகம் ஏற்படும்.

மாணவர்களுக்கு மதிப்பு கிட்டும். பொறியியல், விஞ்ஞானம், கணிதம் போன்ற இனங்களில் புதிய முயற்சி வேண்டாம். எனினும் உங்களுக்கான பாராட்டுகள் கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் இருக்கும். சித்த சுத்தியோடு செய்யப்படும் நற்காரியங்களினால் பலன் ஏற்படும். புகழும் உண்டாகும்.

அவிட்டம் 3, 4 பாதங்கள்:
இந்த ஆண்டு உங்கள் பணிகள் பாதிக்கப்படாது. உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் குறிப்பறிந்து நடந்து கொண்டால் வீண் தொல்லைகளைத் தடுக்கலாம். தொழில் பாதிக்கப்படாது. வியாபாரிகளுக்கு அளவான லாபம் உண்டு. தொழில் சிறக்கும். வியாபாரம் செழிக்கும். உங்களை வாழ வைக்கும் பொறுப்பை உங்களைச் சார்ந்த பெரியோர்கள் ஏற்றுக் கொள்வார்கள். உங்கள் மீது அதிக அக்கறை காட்டுவார்கள். குடும்ப நலம், தாம்பத்தியம் எல்லாம் சீராக இருக்கும். தகுதி வாய்ந்தவர்களுகளுக்குப் பதவி உயர்வு உண்டாகலாம்.

சதயம்:
இந்த ஆண்டு உங்களுக்கு பெருந்தொல்லை ஏற்படாது. தொழில் சிறப்படையும். முதலாளி தொழிலாளி உறவு அன்புடன் விளங்கும். விவசாயிகளுக்குச் சிறு சோதனை உண்டாகலாம். எனினும் மனம் தளர வேண்டாம். தொழிலில் முன்னேற்றம் ஏற்படுமானாலும் அதற்காக மிகுந்த உழைப்பைச் செலுத்த வேண்டியிருக்கும். குடும்பத்தில் சிறு சிறு சங்கடங்கள் ஏற்படலாம். எனினும் குடும்ப நலம் பாதிக்கப்படாது. விருந்தினர் வருகையும், விருந்தினராகச் செல்லக்கூடிய நிலையும் உண்டு. புத்திரர்களை முன்னிட்டுப் பெருமைப்படக்கூடிய ஒரு நிகழ்ச்சி ஏற்படலாம்.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்:
இந்த ஆண்டு பெருந்தொல்லை உண்டாக இட மில்லை. மனதிற்கு இனிமை தரும் சில நன்மைகள் நடக்கும். உங்களுடைய அந்தஸ்து பாதிக்கப்படாது. முழுமுயற்சியுடன் செய்யப்படும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலையில் அவ்வளவு சௌகரியத்தை எதிர்பார்ப்பதற்கில்லை. தொழிலில் ஏற்றத்தாழ்வுகள் தவிர்க்க முடியாதவையாகவே இருக்கும். வியாபாரிகளுக்கு லாபம் தடைப்படாது. கலைத்துறைப் பணிகள் சிறப்படையும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். அரசியல்வாதிகள் கௌரவிக்கப்படுவார்கள். ஆன்றோர் நல்லாசி கிடைக்கும்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் சிவன் கோவிலை வலம் வரவும். 
சிறப்பு பரிகாரம்: நவகிரகத்திற்கு நெய் விளக்கு ஏற்றி வழிபடவும்.
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு
செல்ல வேண்டிய தலம்: திருநள்ளாறு, கும்பகோணம், திருத்தணி
சொல்ல வேண்டிய மந்திரம் - “ஓம் ஸம் ஸ்ரீசனீச்வராய நம:”.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புத்தாண்டு ராசிபலன் 2024: மகரம் ராசியினருக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும்?