Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் ஒரு ஜீரோ, அதில் இணைந்த பிரியங்காவும் ஜீரோ: உபி முதல்வர்

Webdunia
சனி, 26 ஜனவரி 2019 (09:25 IST)
காங்கிரஸ் என்ற ஜீரோவுடன் பிரியங்கா என்ற ஜீரோ இணைந்துள்ளதாகவும், இந்த ஜீரோக்களால் எந்தவித மாற்றமும் ஏற்படாது என்றும் உத்தரபிரதேச முதல்வர் ஆதித்யநாத் யோகி தெரிவித்துள்ளார்.
 
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கவும் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவும் நாடு முழுவதிலும் உள்ள மாநில கட்சிகள்  தயங்கி வரும் நிலையில் அதிரடியாக பிரியங்கா காந்தியை காங்கிரஸ் களமிறக்கியுள்ளது. அதுமட்டுமின்றி மோடி எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து பிரியங்காவை போட்டியிட செய்யவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
 
பிரியங்காவின் அரசியல் வருகை காங்கிரஸ் கட்சிக்கு புது தெம்பை கொடுத்துள்ளது. அக்கட்சியின் தொண்டர்கள் ஆட்சியையே பிடித்துவிட்டது போல் உற்சாகமாகியுள்ளனர். இந்த நிலையில் பிரியங்காவின் அரசியல் வரவு குறித்து தெரிவித்த உபி முதல்வர் ஆதித்யநாத் யோகி, 'ஜீரோவுடன் ஜீரோ சேர்ந்தால் ரிசல்ட் ஜீரோதான். காங்கிரஸ் பெரிய ஜீரோ, அதில் பிரியங்கா உள்பட யார் இணைந்தாலும் ஒன்றும் வராது' என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி.. காவல்துறை கைகள் கட்டப்பட்டு உள்ளது: அண்ணாமலை

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments