Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தன்னைத்தானே செருப்பால் அடித்து கொண்ட எம்.எல்.ஏ! பெரும் பரபரப்பு

Advertiesment
, ஞாயிறு, 16 ஏப்ரல் 2017 (22:16 IST)
ஆந்திர மாநிலத்தில் நகராட்சி சேர்மன் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதால் தன்னைத்தானே செருப்பால் அடித்து கொண்ட எம்.எல்.ஏ ஒருவரின் நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



 


ஆந்திர மாநிலத்தில் உள்ள கடப்பா மாவட்டத்தின் புரோட்டாடுர் என்ற நகராட்சிக்கான சேர்மன் தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று தெலுங்கு தேச கட்சியினர் தேர்தல் அதிகாரியிடம் வேண்டுகோள் வைத்தனர்.

ஆனால் தேர்தல் அதிகாரி இதற்கு மறுக்கவே ஆத்திரமடைந்த தெலுங்கு தேச கட்சியினர் தேர்தல் நடைபெற்ற இடத்திற்குள் நுழைந்து சேர் மற்றும் மேஜைகளை அடித்து நொறுக்கினார்கள். இதனால் வேறு வழியின்றி நகராட்சி சேர்மன் தேர்தலை அதிகாரி தள்ளிவைத்தார்.

தேர்தல் அதிகாரியின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த புரோட்டாடுர் தொகுதி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. பிரசாத ரெட்டி திடீரென தான் காலில் மாட்டியிருந்த செருப்பை கழட்டி தன்னைத்தானே அதிகாரி முன் அடித்து கொண்டார். இதனால் அதிகாரி அதிர்ச்சி அடையவே போலீசார் அவரை பத்திரமாக வெளியேற்றினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகளிர் விடுதியில் நள்ளிரவில் 3 மாணவிகளிடம் வாலிபர் செய்த சேட்டை என்ன தெரியுமா?