Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனாவுக்கு முக்கியத்துவம் தேவையில்லை, தடுப்பூசிக்கு செலவு செய்வது வீண்: ஒய்.எஸ்.ஆர் காங். எம்பி

Advertiesment
கொரோனாவுக்கு முக்கியத்துவம் தேவையில்லை, தடுப்பூசிக்கு செலவு செய்வது வீண்: ஒய்.எஸ்.ஆர் காங். எம்பி
, வியாழன், 18 மார்ச் 2021 (07:25 IST)
கொரோனாவுக்கு முக்கியத்துவம் தேவையில்லை
கொரோனா வைரஸ் தொற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை என்றும் 100 ஆண்டுக்கு ஒருமுறை ஒரு தொற்று பரவ தான் செய்யும் என்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்பி ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவி வருவதை அடுத்து அந்த நோயை கட்டுப்படுத்த உலக சுகாதார மையம் உள்பட அனைத்து நாடுகளும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன
 
கொரோனா தடுப்பூசிக்காக ஒவ்வொரு நாடும் ஆயிரக்கணக்கான கோடிகளை செலவு செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்பி சஞ்சீவ் குமார் என்பவர் இதுகுறித்து கூறிய போது கொரோனாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை என்றும் கொரோனா தடுப்பூசிகளை ரூபாய் 35,000 கோடி செலவு செய்வது வீண் செலவு என்று கூறியுள்ளார்
 
மேலும் கொரோனா போன்று தொற்று நோய் நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை வந்து கொண்டுதான் இருக்கும் என்றும் அதற்கு அரசு அதிக முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை என்றும் கூறியுள்ளார் அவருடைய சர்ச்சைக்குரிய பேச்சால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமமுக வேட்பாளர் திடீர் மாற்றம்: டிடிவி தினகரன் அறிக்கை!