உத்தரபிரதேச மாநிலத்தில் இந்துக் கடவுளாம கிருஷ்ணரைப் பற்றி, ஒரு இளைஞர் சமூக வலைதளமான பேஸ்புக்கில் பதிவிட்டார். இந்நிலையில் அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அங்குள்ள காவல் கண்காணிப்பாளர் கூறியுள்ளது : உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள நந்தலால் கிராமத்தில் வசிப்பவர் முபின் ஹாஸ்மி. இவர் கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி தனது பேஸ்புக் பக்கத்தில் இந்துக் கடவுளான கிருஷ்ணரைப் பற்றி தவறான கருத்து வெளியிட்டுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூரில் உள்ள சிலர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீஸார் இந்திய தண்டனையியல் சட்டமான தகவல் தொழில்நுட்பப் பிரிவின் கீழ் முபின் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.