Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

களைகட்டிய யோகா திருவிழா..! 600 மாணவர்கள் பங்கேற்று அசத்தல்...!!

களைகட்டிய யோகா திருவிழா..! 600 மாணவர்கள் பங்கேற்று அசத்தல்...!!

Senthil Velan

, வெள்ளி, 5 ஜனவரி 2024 (11:22 IST)
புதுச்சேரியில் 4 நாட்கள் நடைபெறும் 29வது அகில உலக யோகா திருவிழாவை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தனர் 
 
யோகக்கலை உடல், மனம், அறிவு, உணர்வு மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கும், சமன்பாட்டிற்கும் உதவிடும் கலை ஆகும். யோகா என்னும் கலை வாழ்க்கை அறிவியல் மற்றும் வாழும் கலை ஆகும். அந்த வகையில் புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அகில உலக யோகாத்திருவிழாவை நடத்துவது வழக்கம். 
ALSO READ: காவிரி தண்ணீர் வராததால் விவசாயிகள் கவலை.! ஏக்கருக்கு ரூ 30 ஆயிரம் வேண்டும்..!!

இந்தாண்டு 29 வது அகில உலக யோகா திருவிழா  வரும் 7ந்தேதி வரை நடைபெறுகிறது.  புதுச்சேரி கடற்கரை காந்தி திடலில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் லெட்சுநாராயணன், தலைமைச்செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு யோகா திருவிழாவை தொடக்கி வைத்தனர்.
துவக்க நாளில் 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பெருந்திறள் யோகாசனஙகளை செய்து காட்டி அசத்தினர்.

webdunia
காமராஜர் மணிமண்டபத்தில் பல்வேறு மாநில யோகா கலைஞர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் யோகாசன போட்டிகள் நடைபெறவுள்ளது. மேலும் இந்த யோகா திருவிழாவின் ஒரு பகுதியாக தியானப்பயிற்சி, யோகப்பயிற்சி, யோகா தொடர்பான கருத்தரங்கம், யோகா மற்றும் இயற்கை சிகிச்சை முறைகள் உள்ளிட்டவைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2வது நாளாக பங்குச்சந்தை ஏற்றம்.. மீண்டும் உச்சம் செல்வதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!