Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் மீது புகார் கூறியுள்ள பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர்: எடியூரப்பா பேட்டி

Mahendran
வெள்ளி, 15 மார்ச் 2024 (11:05 IST)
முன்னாள் கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா மீது பாலியல் குற்றச்சாட்டை சிறுமி ஒருவர் கூறிய நிலையில் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்த நிலையில் என் மீது எழுந்து உள்ள குற்றச்சாட்டை சட்டரீதியாக எதிர்கொள்வேன் என்று கூறிய முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா புகார் கூறியுள்ள பெண் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது என்று தெரிவித்துள்ளார் 
 
முன்னதாக கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது கடந்த 2ம் தேதி பெண் ஒருவர் தனது 17 வயது மகளுடன் கல்வி தொடர்பான உதவி கேட்டு சென்றதாகவும், அப்போது எடியூரப்பா சிறுமியை தனி அறைக்கு அழைத்து சென்று அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் புகார் கொடுத்துள்ளார்.
 
இந்த புகாரின் அடிப்படையில் கர்நாடக மாநில போலீஸார் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் உண்மைதானா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edit by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்.எஸ்.பாரதி ஒரு ஞாயிற்றுக்கிழமை வக்கீல். கோர்ட்டுக்கு போகாதவர்: கராத்தே தியாகராஜன்

ரயில் இன்ஜின் டிரைவர்கள் இளநீர் குடிக்க கூடாதா? தென்னக ரயில்வே உத்தரவுக்கு என்ன காரணம் ?

பிப்ரவரியில் தொடங்குகிறது கோடை.. 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என தகவல்..!

தவெகவின் கொள்கை தலைவருக்கு இன்று நினைவு நாள்.. விஜய் மரியாதை..!

சிறுமி வன்கொடுமை, கொலை! கும்பமேளா சென்ற குற்றவாளி! சேஸ் செய்து பிடித்த போலீஸ்!

அடுத்த கட்டுரையில்