Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலகில் 6வது பெரும் பணக்காரர் முகேஷ் அம்பானி… டுவிட்டரில் டிரெண்டிங்…

உலகில்  6வது பெரும் பணக்காரர் முகேஷ் அம்பானி… டுவிட்டரில் டிரெண்டிங்…
, செவ்வாய், 14 ஜூலை 2020 (17:29 IST)
சமீபத்தில் ஒரு செய்தி வெளியானது. அதில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த எலான் மஸ்க் உலக செல்வந்தர்கள் பட்டியலில் அம்பானியை பின்னுக்கு தள்ளியிருந்தார். இந்நிலையில் மீண்டும் தற்போது முகேஷ் அம்பானி சில இடங்கள் முன்னேறி உள்ளார்.

சமீப காலமாக அம்பானியின் ஜியோ நிறுவனத்துடன் பேஸ்புக், சில்வர்லேக் உள்ளிட்ட வெளிநாட்டு கம்பெனிகள் பங்குதாரர்களாக இணைந்துள்ளதால் எஊ.1,15,693 கோடிக்கு ஜியோ பங்கு உயர்ந்துள்ளது. இதனால் கிடுகிடுவென அம்பானி நிறுவனங்களின் பங்கு உயர்ந்ததால் அம்பானியில் சொத்து மதிப்பில் 24 பில்லியன் டாலர்கள் உயர்ந்து 64.5 பில்லியன் டாலர்கள் ஆனது. இதனால் உலக பணக்காரர்களின் முதல் 10 பேர் பட்டியலில் எட்டாவது இடத்தை பிடித்தார் முகேஷ் அம்பானி. 7வது இடத்தில் கூகிள் நிறுவனத்தின் சர்ஜே பிரன் இருந்தார். ஒன்பதாவது இடத்தில் வாரன் பஃபெட் இருந்தார்.

இந்த மதிப்பை ஒரே வாரத்தில் உடைத்துள்ளார் ரியல் லைஃப் அயர்ன் மேன் என வர்ணிக்கப்படும் எலான் மஸ்க். டெஸ்லா கார் நிறுவனம், ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆய்வு மையம் என பல தொழில்நுட்ப நிறுவனங்களை நிர்வகித்து வரும் எலான்மஸ்க் 70.5 பில்லியன் டாலர்களுடன் 8வது இடத்தை பிடித்துள்ளார். இதனால் முகேஷ் அம்பானி 9வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியானது.

இந்நிலையில் இன்று  முகேஷ் அம்பானியில் நிகர சொத்து மதிப்பு ரூ.5.44 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.  எனவே அவர் உலகில் பெரும் பணக்காரர்களில் டாப் 10 இடங்களில் 6 வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.  கடந்த 22 நாட்களில் மட்டும் அவரது ரிலையன்ஸ் குழுமத்தின் பங்குகளின் மதிப்பு 60 ஆயிரம் கோடி ரூபா வளர்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜூலையோடு முடியும் ஊரடங்கு? ஜெயகுமார் சூசகம்!!