Publish Date: Fri, 19 Jun 2020 (17:38 IST)
Updated Date: Fri, 19 Jun 2020 (17:40 IST)
கடன் இல்லாத நிறுவனமாக மாறியதற்கு மகிழ்ச்சி கொண்டுள்ளார் ரிலையன்ச் ஜியோ தலைவர் முகேஷ் அம்பானி.
ஜியோவில் முதலீடு செய்த நிறுவனங்களில் இருந்து வசூலிக்கப்பட்ட ரூ 11,693.95 கோடி மூலமாகவும், உரிமை வெளியீட்டில் இருந்து ரூ 53,124.20 கோடியின் மூலமாகவும் 58 நாட்களில் ரூபாய் 168,818 கோடிக்கு மேல் திரட்டியுள்ளது ரிலையன்ஸ் நிறுவனம்.
இது குறித்து, ரிலையன்ஸ் குழுமத்தை மார்ச் 2021-க்கு முன்னதாகவே நிகர கடன் இல்லாததாக மாற உதவியுள்ளதாக அறிவித்துள்ளார். 2021 மார்ச் 31 ஆம் தேதி என்னும் எங்களின் இலக்குக்கு முன்னதாகவே ரிலையன்ஸ் நிகர கடனில்லாமல் செய்வதன் மூலம் பங்குதாரர்களுக்கு நாங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம் என்று அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், பெருமையடைகிறேன் என முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.