Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வொர்க் ஃப்ரம் ஹோம் செய்பவர்கள் ஆபாச படங்கள் பார்க்கின்றனர்.: ஒரு பகீர் ஆய்வு

வொர்க் ஃப்ரம் ஹோம் செய்பவர்கள் ஆபாச படங்கள் பார்க்கின்றனர்.: ஒரு பகீர் ஆய்வு
, செவ்வாய், 19 மே 2020 (07:58 IST)
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக உலகின் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஐடி துறையில் பணிபுரிபவர்கள் உள்பட பலர் தற்போது வொர்க் ஃப்ரம் ஹோம் என்ற வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையை கடைபிடித்து வருகின்றனர். ஆனால் இந்த முறையில் பலர் வேலை செய்வதற்கு பதில் ஆபாச படங்களை பார்த்து வருவதாக சைபர் பாதுகாப்பு நிறுவனம் ஒன்று ஆய்வில் தெரிவித்துள்ளது இதனால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது 
 
உலகம் முழுவதும் வீட்டில் பணியாற்றும் ஊழியர்களின் 51% பேர்கள் தங்கள் வேலைகளுக்கு நடுவே ஆபாச படங்களை பார்ப்பதாக அந்நிறுவனம் தனது ஆய்வில் உறுதி செய்துள்ளது. அலுவலக கம்ப்யூட்டரில் 18 சதவீதம் பேரும் சொந்த கம்ப்யூட்டரில் 33 சதவீதம் பேரும் ஆபாசப்படங்களை பார்ப்பதாகவும் இதனால் ஊழியர்களின் வேலை பாதிக்கப்படுவதாகவும், இதனால் அலுவலத்திற்கு நிர்வாக ரீதியாக நஷ்டம் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அந்த சைபர் பாதுகாப்பு நிறுவனம் எச்சரித்துள்ளது
 
அது மட்டுமின்றி வீட்டில் இருந்து வேலை செய்பவர்களுக்கு அதிக அளவில் மன அழுத்தமும் ஏற்படுவதாகவும், ஒரே நேரத்தில் வீட்டில் உள்ள பிரச்சனைகள் மற்றும் அலுவலகப் பிரச்சனைகள் ஆகிய இரண்டையும் சந்திக்க வேண்டிய நிலை இருப்பதால் அவர்களுடைய மனநிலை பாதிக்கப்படுவதாகவும் அந்த ஆய்வில் தெரிவித்துள்ளது
 
ஆனால் அதே நேரத்தில் இந்த லாக்டோன் காரணமாக செய்திகளை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. முன்பை விட தற்போது 55 சதவீதம் பேர் அதிகமாக செய்திகளை பார்ப்பதாகவும் இது ஒரு நல்ல விஷயம் என்றும் அந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது. இந்த ஆய்வின் அறிக்கை தற்போது உலகம் முழுவதும் உள்ள பல நிறுவனங்களை யோசிக்க வைத்துள்ளது
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா எதிரொலி… தமிழ் ஊடகவியலாளர்களுக்குப் பறிபோகும் வேலைகள்- அதிர்ச்சித் தகவல்!