Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காவல் நிலையத்தில் போலீசை சரமாரியாக அறைந்த பெண்; வைரல் வீடியோ

Advertiesment
உத்த்ரபிரதேசம்
, வியாழன், 14 செப்டம்பர் 2017 (14:12 IST)
காவலர் ஒருவரை காவல் நிலையத்தில் வைத்து பெண் ஒருவர் கன்னத்தில் சரமாரியாக அறையும் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. 


 

 
உத்த்ரபிரதேச மாநிலம் பிரேம் நகர் காவல் நிலையத்தில் பெண் ஒருவர் காவலரை கன்னத்தில் அறையும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் கடந்த செவ்வாய்கிழமை நிகழ்ந்துள்ளது. காவலரை அறைந்த பெண் உபி மாநிலத்தில் மாவட்ட நீதிபதியாக இருப்பது தெரியவந்துள்ளது.
 
அந்த பெண்ணின் மகன் படிக்கும் இடத்தில் ஏதோ தகராறில் ஈடுப்பட்டதால் அந்த விஷயம் காவல் நிலையம் வரை சென்றுள்ளது. இதனால் காவல் நிலையத்தில் மாணவர்களின் பெற்றோர்களை அழைத்துள்ளனர். தனது மகனிடம் விசாரணை என்ற பெயரில் தவறாக நடந்துக்கொண்டதாக கூறி அந்த பெண் காவலரை தாக்கினார் என கூறப்படுகிறது. 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அகமதாபாத் - மும்பை இடையே புல்லட் ரயில்; அடிக்கல் நாட்டிய ஜப்பான் பிரதமர்